இந்தி திரைப்படங்களில் அறிமுகமாகி இன்று பாண் இந்தியா அளவில் கலக்கி வரும் நடிகை தான் நிதி அகர்வால், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் தனக்கான தனி இடத்தை பிடித்து வருகிறார். 'முன்னாள் மாடல்' என்ற அடையாளத்தை தாண்டி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் நிதி, தமிழ் சினிமாவில் ‘பூமி’, ‘ஈஸ்வரன்’, ‘கலகத் தலைவன்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரபாஸுடன் இணைந்து ‘தி ராஜா சாப்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். இந்த சூழலில், சமீபத்தில் சேனலுக்கு அளித்த பேட்டியில் நிதி அகர்வால் தன் வாழ்க்கை, எதிர்பார்ப்புகள், திரைத் தேர்வுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த பேட்டியில், “நான் ஒரு மாஸ் ஹீரோயினாக வர விரும்புகிறேன். ஆனால், அதற்காக எல்லா விதமான காட்சிகளிலும் நடிக்க வேண்டுமென்று யாரும் நினைக்க வேண்டாம். குறிப்பாக லிப்லாக் காட்சிகள், நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகள் அல்லது அவமானம் ஏற்படுத்தும் சீன்களில் நடிக்க நான் விரும்புவதில்லை. என் பெற்றோர்கள் கூட உட்கார்ந்து என் படம் பார்க்கும்படியே நான் நடிக்கும் படம் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். எனவே நான் தேர்வு செய்யும் கதைகள், அதில் வரும் காட்சிகள் என அனைத்தையும் கவனமாக தரவு செய்து வருகிறேன். அதுமட்டுமின்றி, இன்று திரையுலகத்தில் வெற்றி பெற கவர்ச்சி என்பது அவசியமே இல்லை.
இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.. டபுள் டமாக்கா..!! வெளியானது "சூர்யா 46" சிறப்பு போஸ்டர்..!
நல்ல கதைகள், வித்தியாசமான கேரக்டர்கள் இருந்தால், ரசிகர்கள் ஆதரவு தருவதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் என்னால் இயன்ற அளவுக்கு கலையாகவும், குணச்சித்திரமாகவும் நடிக்க முயற்சி செய்கிறேன். எனது தோற்றம் மட்டும் அல்லாமல் எனது நடிப்பின் மூலமும் ரசிகர்களை ஈர்க்க விரும்புகிறேன்" என்றார். இப்படி இருக்க, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தன் வாய்ப்புகளை விரிவாக்கிக் கொண்டிருக்கும் நிதி, தற்போது பிஸியாக நடிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ‘தி ராஜா சாப்’ போன்ற பிரமாண்ட தயாரிப்புகள், அவருக்கு மேலும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோயின் என்ற அவரது கனவு நிறைவேறுமா என்பதை எதிர்காலமே தீர்மானிக்க வேண்டும்.

இந்த பேட்டியின் மூலம், திரை உலகில் கவர்ச்சி என்பதைவிட கலையை மேலாக மதிக்கும் நடிகையாக நிதி அகர்வால் தன்னை உறுதியுடன் நிலைநிறுத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: 4 வாரங்களில் சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்ங்க.. ரவி மோகனுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!