இனிப்பு முதலில் சாப்பிட நன்றாக இருக்கும் அதையே தொடர்ந்து சாப்பிட்டால் தெகட்டி பிடிக்காமல் போய்விடும். அதேபோல் தான் ஓவியாவும், கவர்ச்சி மற்றும் டபுள் மீனிங் பேச்சுக்கள் ஆரம்பத்தில் கேட்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும் ரசிகர்களுக்கு நன்றாக இருந்தது. ஆனால் போக போக அதுவே வெறுப்பாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு தற்பொழுது தனது ரசிகர்களை படிப்படியாக இழந்து வரும் ஓவியாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்து கொண்டு தான் வருகிறது.

2007ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "கங்காரு" படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. பின் தமிழில் 2010ம் ஆண்டு வெளியான "களவாணி" படத்தின் மூலம் மகேஷ் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இளசுகளின் கதாநாயகியாக மாறினார்.
இதனை தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே, 90 எம்எல் என வரிசையாக பல படங்களில் நடித்த ஓவியாவுக்கு, அதன் பின்னர் நடித்த படங்கள் பெரிதாக ஓடாமல் போக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
இதையும் படிங்க: சினிமாவில் கம்பேக் கொடுக்கும் ஓவியா..! புதிய படத்திற்கான பூஜை காட்சிகள் வெளியீடு..!

இந்த சூழலில், திடீரென ஒருநாள் நடிகை ஓவியா தனது காதலனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாக, அடுத்த மூன்று நாட்களுக்கு சோஷியல் மீடியாவில் டிரெண்டானார். அந்த வேளையில் நடிகை ஓவியாவின் இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு இளைஞர் உல்லாச வீடியோ கிளாரிட்டி இல்லை என கமெண்ட் போட, அதற்கு ஓவியா "அடுத்த முறை தெளிவாக பதிவிட சொல்கிறேன்" என அவருக்கு நிமிடத்தில் பதிலடி கொடுத்தார். மேலும், வீடியோ வெளியிட்ட நபர் மீது புகாரும் கொடுத்துள்ளார் ஓவியா. அந்த வழக்கும் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்க, நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் 2024ம் ஆண்டு "பூமர் அங்கிள்" படத்தில் யோகிபாபுவுடன் மீண்டும் இணைந்து நடித்திருந்த ஓவியா, பட வாய்ப்புகள் கிடைக்காததால் யூடியூபில் வெப்சீரிஸிலும் நடித்திருந்தார். இப்படி இருக்க, சமீபத்தில் "சேவியர்" எனும் படத்தில் ஓவியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், புதிய படம் ஒன்றின் பூஜை வீடியோவை நேற்று வெளியிட்டு இருந்தார் நடிகை ஓவியா. அந்த வீடியோவில் மாலை அணிந்து சேலையில் கல்யாண பெண் போல தோற்றமளித்து இருக்கும் ஓவியாவை ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர்.

அந்த புகழ்ச்சியை அடுத்த பதிவில் இழந்து இருக்கிறார் நடிகை ஓவியா. காரணம் என்னவெனில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்த ஓவியா, அதில் கடற்கரையில் தனது தோழிகளுடன் காற்று வாங்கிக் கொண்டு இருந்த ஓவியா, நமக்கு என்னப்பா...இருக்குற இடம் தெரியாமல் இருக்கணும், என யாரையும் கண்டுகொள்ளாமல் மீன் பிடிக்க வலைகளை சரி செய்து கொண்டு இருந்த மீனவ இளைஞர்களுடன் விளையாட்டாக பேசிக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த நாய்களுடன் விளையாடிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்.

அதுவரை எல்லாவறையும் நன்றாக செய்த ஓவியா, திடீரென தனது கையில் இருந்த சிகரெட்டை ஸ்டைலாக பற்ற வைத்து அதை புகைத்துக் கொண்டு உள்ளார். இதனை பார்த்த இளசுகள் ஓவியாவை பாராட்டும் விதமாக இவ்வளவு ஸ்டைலா நீங்க தம் அடிப்பாங்கனு எங்களுக்கு தெரியாது என கமெண்ட் செய்து வருகின்றனர். இதனை பார்த்த இளசுகளின் அன்பு தாய்மார்கள் அவர்களை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இந்த வீடியோ தற்பொழுது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், நடிகர் விஜய் படத்தில் தம் அடிக்கும் காட்சிகளை பார்த்தால் குழந்தைகள் கெட்டு போவார்கள் என்று சொன்னவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர் .
இதையும் படிங்க: சினிமாவில் கம்பேக் கொடுக்கும் ஓவியா..! புதிய படத்திற்கான பூஜை காட்சிகள் வெளியீடு..!