"ஓவியா...ஓவியா..., உங்களுக்கா ரசிகர்கள் இருக்கோம் பாருயா" என தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகை ஓவியா. எல்லா விஷயங்களிலும் மிகவும் ஓபன் டைப்பாக தில்லாக பேசி வரும் ஓவியாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்களுக்கு "ஓவியா ஆர்மி" என்ற பெயரும் உள்ளது. அந்த ஆர்மியில் கொஞ்ச நாளாக ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என தெரியவில்லை. ஏனெனில் நடிகை ஓவியாவின் திரைப்படங்கள் எதுவும் சில வருடங்களாக வெற்றி பெறுவதாக தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் இருந்த சக போட்டியாளர்களை எதிர்த்து பிரபலமான ஓவியாவுக்கு பரம விரோதியாக பிக்பாஸ் வீட்டில் மாறியவர் "ஜூலி". இவர் இல்லை என்றால் இன்று ஓவியா இல்லை என்றே சொல்லலாம். ஜூலியால் இன்று ஸ்டாரானவர் தான் நடிகை ஓவியா. ஆரம்பத்தில் "முட்டை குள்ள வரும்போது முட்டை குள்ள வரும்போது என்ன தான் சொன்னிசா கோழிக்குஞ்சு" என சிரித்த முகத்துடன் நடிகர் விமலுடன் நடித்து குடும்ப பாங்கான பெண்ணாக சினிமாவில் தோன்றிய ஓவியா, நாளடைவில், தான் ஓபன் டைப் என்பதை காண்பிக்க, ஓபனாக ஆடை அணிவது, ஓபனாக படங்களில் நடிப்பது, ஓப்பனாக பேசுவது என அனைத்திலும் ஓபனாகவே இருக்கிறார்.
இதையும் படிங்க: நீச்சல் உடையில் அட்டகாசம் செய்யும் "மங்காத்தா" நடிகை...! உச்சபட்ச கிளாமர் புகைப்படங்கள்..!

இனிப்பு முதலில் சாப்பிட நன்றாக இருக்கும் அதையே தொடர்ந்து சாப்பிட்டால் தெகட்டி பிடிக்காமல் போய்விடும். அதேபோல் தான் ஓவியாவும் , கவர்ச்சி மற்றும் டபுள் மீனிங் பேச்சுக்கள் ஆரம்பத்தில் கேட்கும் பொழுதும் பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு நன்றாக இருந்தது. ஆனால் போக போக அதுவே வெறுப்பாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு தற்பொழுது தனது ரசிகர்களை படிப்படியாக இழந்து வரும் ஓவியாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்து கொண்டு தான் வருகிறது.

இப்படி இருக்க, 2007ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "கங்காரு" படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. பின் தமிழில் 2010ம் ஆண்டு வெளியான "களவாணி" படத்தின் மூலம் மகேஷ் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இளசுகளின் கதாநாயகியாக மாறினார். இதனை தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே, 90 எம்எல் என வரிசையாக பல படங்களில் நடித்த ஓவியாவுக்கு, அதன் பின்னர் நடித்த படங்கள் பெரிதாக ஓடாமல் போக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

இந்த சூழலில், திடீரென ஒருநாள் நடிகை ஓவியா தனது காதலனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாக அடுத்த மூன்று நாட்களுக்கு சோஷியல் மீடியாவில் டிரெண்டானார். அந்த வேளையில் நடிகை ஓவியாவின் இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு இளைஞர் உல்லாச வீடியோ கிளாரிட்டி இல்லை என கமெண்ட் போட, அதற்கு ஓவியா "அடுத்த முறை தெளிவாக பதிவிட சொல்கிறேன்" என அவருக்கு நிமிடத்தில் பதிலடி கொடுத்தார். மேலும், வீடியோ வெளியிட்ட நபர் மீது புகாரும் கொடுத்துள்ளார் ஓவியா. அந்த வழக்கும் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் 2024ம் ஆண்டு "பூமர் அங்கிள்" படத்தில் யோகிபாபுவுடன் மீண்டும் இணைந்து நடித்திருந்த ஓவியா பட வாய்ப்புகள் கிடைக்காததால் யூடியூபில் வெப்சீரிஸிலும் நடித்திருந்தார். இப்படி இருக்க, சமீபத்தில் "சேவியர்" எனும் படத்தில் ஓவியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், புதிய படம் ஒன்றின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஓவியா.
அந்த வீடியோவில் மாலை அணிந்து சேலையில் கல்யாண பெண் போல தோற்றமளித்து இருக்கும் ஓவியாவின் காட்சிகளை கண்ட அவரது ரசிகர்கள் இந்த படமாவது அவருக்கு வெற்றியடைய வேண்டும் என வேண்டுதல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜித்தை தோற்கடித்த "குட்டி தல"...! ரேஸில் அஜித்தை திணறவிட்ட ஆத்விக்...!