தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரவி மோகனுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும் தனக்கு முதல் ரசிகையாக தனது மனைவி ஆர்த்தி இருக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் ஆர்த்தியோ எல்லா விஷயத்திலும் அவரது அம்மாவையே முன் வைக்கிறார். தன்னை அவமானப்படுத்துகிறார் என குற்றம் சாட்டி விவாகரத்து செய்ய முன்வந்து நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரவிமோகன் பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் பரவ, அதனை பாடகியும் அப்பொழுது மறுத்தார். ஆனால், தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத்திருமண விழாவில் இருவரும் ஜோடியாக வந்து நிற்க அது இணையத்தில் பேசுபொருளாக மாறியது.

இதனை அடுத்து, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, ஒரு அறிக்கை ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதில், ஒரு வருடமாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன். தற்போது உலகமே நாங்கள் பிரிய என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டிருக்கும். என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என மீடியாவிடம் கேட்டு கொள்கிறேன். சட்டப்படி, எனக்கும் ரவி மோகனுக்கும் விவாகரத்து ஆகவில்லை. ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது மகன்களை தவிக்கவிட்டு சென்று உள்ளார். எந்த பண உதவியும் இல்லாமல் நாங்கள் இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டில் இருந்து பேங்க் மூலமாக எங்களை காலி செய்ய வைத்துள்ளார் ரவி " என தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: பாடகியை கரம் பிடித்த ரவிமோகன்..! சக்காளத்தி சண்டையை ஆரம்பித்த ஆர்த்தி..!

இதனை பார்த்த பாடகி கெனிஷாதனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஆர்த்தி ரவிக்கு பதில் கொடுத்தார். அதில் "ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வர்" என தெரிவித்திருந்தார்.

இப்படி உங்களுக்காக இரு பெண்கள் சண்டையிட்டு வருகிறார்களே இதற்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறீங்களே என அனைவரும் ரவி மோகனை கேள்வி கேட்க, தற்பொழுது இந்த பிரச்சனைக்கு அறிக்கையின் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரவி மோகன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு கேலியாகவும் கிண்டலாகவும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. உண்மையில் பல நாட்களாக திருமண பந்தத்தில் பாதிக்கப்பட்டவன் நான் தான் ஆர்த்தி அல்ல. எனது பெற்றோரை கூட சந்திக்க முடியாத அளவிற்கு தனிமையில் சுற்றி திரிந்தேன். பணம் இல்லாமல் அலைந்தேன்.

இந்த திருமண வாழ்க்கை வேண்டாம் இதில் இருந்து எப்படியாவது வெளியே வந்தால் போதும் என பல வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்தேன். எப்படி வெளியேறுவது என் மகன்களும் உள்ளார்களே என மிகுந்த குழப்பத்தில் இருந்த எனக்கு தெளிவு படுத்தி, பயத்தை போக்கி என்னை வெளியே கொண்ட வந்தவர் தான் என் தோழி பாடகி கெனிஷா. இந்த பிரிவு சாதாரணமாக நான் எடுத்த முடிவல்ல மிகுந்த மனவேதனையுடன் நான் எடுத்த முடிவு.

என் வாழ்வில் நான் சந்தித்த அற்புதமான துணை என்றால் அவர் தான் பாடகி கெனிஷா பிரான்சிஸ். அவரைப் பொறுத்தவரை, நீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேவதை அவர். என்னை உடைத்துக் கொண்டிருந்த ஒரு வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல எனக்கு தைரியம் மட்டுமே இருந்தது. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்த எனக்கு, அவர் தான் உயிர்நாடியாக மாறினார். நீங்கள் அனைவரும் என்னை குற்றம் சொல்லுகிறீர்கள் கெனிஷாவை குற்றம் சொல்லுகிறீர்கள் ஆனால் உண்மை என்ன தெரியுமா, நான் சம்பாதித்த மொத்த பணம், ஆசையாய் வாங்கின வாகனம், என்னுடைய சொத்துக்கள், எனது மரியாதை என அனைத்தையும் என்னிடம் இருந்து பறித்து செருப்பு கூட அணியாமல் வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு என்னை வெளியே அனுப்பினார்கள் ஆர்த்தி குடும்பத்தினர். அப்பொழுதும் எனக்காக வந்து நின்றவர் கெனிஷா மட்டும்தான். என்னுடைய நிலை என்ன என தெரிந்து எனக்கு துணையாக நின்ற தேவதை அவர்.

இதுவரை நான் நடத்திய சட்ட ரீதியான அனைத்துப் போராட்டங்களையும் நேரடியாக பார்த்தார் கெனிஷா. என் மீது இரக்கம் காட்ட யாரும் இல்லாத பொழுது என்னை தாயை போல் அரவணைத்தவர் அவர் தான். நல்ல பாடகி அதே சமயம் நல்ல தெரபிஸ்ட் ஆக இருக்கும் அவரை நான் சந்தித்து எனது பிரச்சனைகளை கூறிய பொழுது தெரபிஸ்ட்டாக இல்லாமல் தோழியாக இருந்து எனக்கு உதவி செய்தார். நான் ஆர்த்தியை விட்டு தான் பிரிகிறேன். எனது இரண்டு மகன்களை விட்டு அல்ல. அவர்களுக்கு உண்டான எல்லா நிதி தேவைகளையும் நான் செய்து கொடுப்பேன். எனது இரண்டு மகன்களையும் நான் பார்க்க முடியாத அளவிற்கு அவர்களுடன் எப்பொழுதும் பவுன்சர்களை வைத்து உள்ளனர்.

ஆதலால் என்னை புரிந்து கொண்டவர்கள் பாடகி கெனிஷாவையும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவனே பாக்.-க்கு சப்போர்ட் பன்றான், அங்க போய் படம் எடுக்கலாமா..! கண்டிஷன் போட்ட இந்திய சினிமா சங்கம்..!