தமிழ் சினிமா, பல மாநிலங்களைச் சேர்ந்த திறமையான புதிய முகங்களை என்றுமே வரவேற்கும் மனநிலையை கொண்டது. இதன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். கர்நாடகாவைச் சேர்ந்தவரான இவர், 2017-ல் வெளியான ‘எமன்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘சிங்கப்பெண்ணே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஷில்பா மஞ்சுநாத் தமிழ் திரையுலகில் அனைவரது பாராட்டையும் பெற்ற படமான ‘எமன்’ படத்தில் நடித்த பின் விஜய் அந்தோனியுடன் நடித்த ‘காளி’ படத்தில் கிராமத்து பின்னணியில் ஒரு உணர்வூட்டும் கதாபாத்திரத்தில் நடித்து மிகச் சிறப்பாக அனைவராலும் பாராட்டப்பட்டார். அதன் பின் வந்த ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தில், அவர் ஒரு நவநாகரிகப் பெண்ணாக நடித்திருந்தார். அதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த இவர், நவீன காதலையும், சமூகக் சமூக உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்தியது விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது. இப்படி பட்ட அவர், தற்போது தமிழ் சினிமா தன்னைக் கொண்டாடும் விதத்தைப் பற்றி தலையார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசியுள்ள ஷில்பா, தனது பயணத்தின் முக்கிய தருணங்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, "நான் இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவள் என்றாலும், தமிழ் சினிமா என் திறமையை அங்கீகரித்து, என்னை உயர்த்தி வைத்திருக்கிறது.. நான் கர்நாடகாவைச் சேர்ந்தவள். எனவே தமிழில் சரியான மொழிகூட தெரியாமல், சினிமா துறையில் சேர்ந்தேன். தொடக்கத்தில் மொழிபெயர்ப்பு இல்லாமல், டயலாக்குகள் கூட புரியாமல் இருந்தது. இது ஒரு நடிகையின் சிறந்த அங்கமாகிய முகபாவனைகள், உடல் மொழி ஆகியவற்றை அடக்கிக் கொள்ளும் சூழ்நிலையை எனக்கு உருவாக்கியது. எனவே, மொழிகள் எனது முன்னேற்றத்தில் ஒரு தடையாக இருந்தது. ஆனால், அதைக் கடந்து வர என்னிடம் இருந்தது அதிகப்படியான உழைப்பும், நம்பிக்கையுமே.. எனக்கு சினிமா பின்புலம் பெரியதாக கிடையாது. ஆனால் எனக்கு இருந்த ஒரே ஆசை நடிக்க வேண்டும் என்பது மட்டும் தான். ஆனால் திரையுலகம் என்பது அதிகப்படியான சவால்கள் நிறைந்தது. அதில் முதலாவது தடையாக, மற்றொரு மாநிலத்துக்குச் சேர்ந்தவள் என்ற அங்கீகாரம் இல்லாத நிலை. அதைவிட, மொழி தெரியாமை, ஒரு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், நான் ஒவ்வொரு வாய்ப்பையும் முக்கியமாக எடுத்துக் கொண்டு, கற்றுக்கொண்டேன் பின் திருந்தினேன், திருத்திக்கொண்டேன் பின் வளர்ந்தேன். தமிழ் சினிமா மட்டும் தான் என் இந்த பயணத்தை மதித்து, அங்கீகரித்து, எனது திறமையை கொண்டாடியது. இங்கு உண்மையான திறமையையே பார்வையிடுகிறார்கள்.
இதையும் படிங்க: லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் ரஜினியா..! இயக்குநர் கொடுத்த ஷாக் நியூஸ்..!
நான் இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவள் என்றாலும், ரசிகர்கள் எனது உழைப்பையும், நடிப்பையும் புரிந்து கொண்டார்கள். எனவே, தமிழ் சினிமாவின் உள்ளார்ந்த திறமையை மதிக்கும் பண்பை கொண்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.. தமிழ் சினிமா தான் பேதங்களை கடந்து, ஒரு நடிகையின் உண்மை திறமை மற்றும் உழைப்பையே மதிப்பதாக உணர்கிறேன். இது போன்ற வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க, நானும் என் ரசிகர்களும் இணைந்த ஒரு நம்பிக்கையான பயணமாக இருக்கிறது.." என தெரிவித்தார். இப்படிபட்ட , ஷில்பா, தமிழ் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சினிமாக்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் “Striker” மற்றும் “I Love You” போன்ற படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் “ரோசாப்பூ” மற்றும் “மதுர ராஜா” போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.. ஆகவே இவர் ஒரு பன்முக திறமைகளை கொண்ட நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். ஆனால், அவர் கூறும் படி, தமிழ் சினிமா தான் அவரது திறமைகயை பார்த்து முதலில் அவரை வரவேற்றது. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வெளியான ‘சிங்கப்பெண்ணே’ படத்தில், ஷில்பா ஒரு கிராமப்புறச் சிந்தனைகளுடன் போராடும் பெண்ணாக நடித்துள்ளார்.

அவருடைய மென்மையான, வலிமையான நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்த படம், அவர் இப்போது எந்த அளவிற்கு பல வகையான பாத்திரங்களை செயல்படுத்தக்கூடிய நடிகையாக வளர்ந்திருக்கிறார் என்பதைச் தெளிவாக காட்டியது. ஷில்பா மஞ்சுநாதின் அனுபவங்கள், தமிழ் திரையுலகின் பாராட்டத்தக்க நெறிமுறைகளையும், புதிய முகங்களை ஊக்குவிக்கும் தன்மையையும் நமக்கு நினைவூட்டுகிறது. அவரைப் போல மற்ற மாநில நடிகைகளும், தமிழ் சினிமாவை தங்கள் அறிமுகத் தளமாக, உறுதியான நடைபாதையாக பயன்படுத்தி முன்னேறுவது, இத்துறையின் திறந்த உள்ளத்தை பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: ‘ஸ்பிரிட்’ படத்தில் ஏற்பட்ட வேலை நேர விவகாரம்...! தீபிகா படுகோனே-வுக்கு நடிகை வித்யா பாலன் ஆதரவு..!