தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தான் ‘கூலி’. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம், ஆரம்பத்திலிருந்தே பல்வேறு காரணங்களுக்காக கவனம் பெற்றது. மிகுந்த நட்சத்திர பட்டாளம், வித்தியாசமான கதைக்களம், ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை என, இது வரையிலான ரஜினியின் படங்களில் மாறுபட்ட ஒரு முயற்சி என கருதப்படுகிறது. இந்த ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டோடு சேர்த்து, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிய ட்ரெய்லரும் அன்று வெளியானது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இந்த படத்தில், பல மாஸ் மற்றும் மெலோடியான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இது அனிருத்தின் ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணியில் மூன்றாவது படம். இந்த திரைப்படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் மூலம், படம் பன்மொழி கலாசார பிம்பத்தை முன்வைக்கிறது. இதுபோன்ற பான்-இந்தியா நட்சத்திர கூட்டணி, தமிழ்ப் படங்களில் தற்போது ஒரு புதிய உயர்நிலையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ‘கூலி’ படத்திற்கு இந்திய திரைப்பட தணிக்கை வாரியத்திலிருந்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது, படத்தில் இடம் பெற்றுள்ள அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் தீவிரமான திரைக்காட்சிகள் காரணமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், இது குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக இல்லாமல், தீவிரமான திகில் மற்றும் ஆக்ஷன் அனுபவமாக அமைந்திருக்கலாம் எனத் திரையுலக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ள ‘கூலி’ திரைப்படம், 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது. சுதந்திர தின விடுமுறை நாளை முன்னிட்டு படம் வெளியாவதால், வார இறுதி மற்றும் பண்டிகை காலம் சேரும் வகையில் மிகப்பெரிய ஓப்பனிங்க் வசூலை எதிர்நோக்கி உள்ளது. இப்படியாக ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற படங்களில் சமூக அரசியல் மற்றும் ஆக்ஷன் கதையமைப்பை வலுவாக எடுத்துரைத்த லோகேஷ் கனகராஜ், ரஜினியுடன் இணைந்து இப்படம் மூலம் புதிய பயணத்தை தொடங்க இருக்கிறார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு முன் அமெரிக்காவில்...! அதிரடியாக வெளியாக இருக்கிறது ரஜினியின் "கூலி"...!
இது லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் இனைக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை என்றாலும், பலர் இந்த படம் அதன் தொடர்ச்சி என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். எனவே ‘கூலி’ படம் ஒரு சாதாரண ரஜினி படம் அல்ல, ஒரு புது பரிமாணத்தை தேடும் முயற்சியாகவே இருக்கிறது.. இந்த நிலையில் கூலி படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார் நடிகை நடிகை ஸ்ருதிஹாசன். அதன்படி தனியார் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், " கூலி படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. மேலும் என் கதாபாத்திரம் கொல்லப்படுமா?, நான் சண்டையிடுவேனா?, என ரசிகர்கள் பார்க்கும் இடமெல்லாம் கேள்வி கேட்கின்றனர். நீங்கள் நினைப்பதை போன்றெல்லாம் ஒன்றும் கிடையாது.. இந்த படத்தில் நான் சண்டையெல்லாம் போடவில்லை. ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜின் மகளாக நடித்துள்ளேன் அவ்வளவு தான். இந்த படத்தின் கதையை கேட்ட போது, எனது கதாபாத்திரத்தை அதிகமான பெண்கள் தொடர்புப்படுத்தி கொள்ளும்படி இருக்குமென எனக்கு தோன்றியது. இந்த படம் டெஸ்டோஸ்டிரோன் நிறைந்த உலகமாக இருக்கும். ஆனால் நான் அதில் ஆரோக்கியமான ஈஸ்ட்ரோஜனாக இருப்பேன்.. ஆதலால் கவலை வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

இப்படியாக படத்தின் வெளியீடு நெருங்க நெருங்க பிரபலங்களின் பேட்டிகள் படத்தை காணும் ஆர்வத்தை தூண்டி வருவதால் ரசிகர்கள் செய்வதறியாது இருக்கின்றனர்.
இதையும் படிங்க: "கூலி" பட இசை வெளியீட்டு விழா வீடியோவால் கலங்கடித்த படக்குழு..! இன்னும் என்னலாம் பண்ணப்போறாங்களோ..!