தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் எஸ்.கே-வின் 23வது திரைப்படமான 'மதராஸி' படத்தின் பணிகளை முழுமையாக முடித்துள்ளார். இப்படத்தை, 'கஜினி', 'துப்பாக்கி', 'துபாய் சீனு' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். 'மதராஸி' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பங்கேற்று, தங்கள் தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளனர்.
படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றியுள்ளார். இவரது இசையமைப்பும், பாடல்களும், ப்ரோமோக்குகளின் பின்னணியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை 'ஸ்ரீ லட்சுமி மூவிஸ்' நிறுவனம் அதிக முதலீட்டுடன் தயாரித்து இருக்கிறது. திரையரங்குகளில் இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, ரசிகர்களிடையே படத்திற்குண்டான ஹைப் அதிகமாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டியில், "'மதராஸி' திரைப்படம் 'கஜினி' மாதிரி ஒரு வலிமையான திரைக்கதை மற்றும் 'துப்பாக்கி'யை நினைவுபடுத்தும் ஆக்ஷன் காட்சிகளுடன் அமையும்" என உறுதியுடன் கூறியுள்ளார். இது, சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்த சூழலில் தற்போது, 'மதராஸி' படத்தின் முக்கிய கதைக்களம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, "மதராஸி என்பது ஒரு அதிரடியான காதல் கதை. தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒரு சிறப்பு அதிகாரிகள் குழுவுக்கும், சக்திவாய்ந்த வட இந்திய மாபியா அமைப்புக்கும் இடையே உருவாகும் மோதல் தான் படத்தின் மையமாக இருக்கிறதாம்.

இந்த மோதலுக்கு இடையே, காதல், பழிவாங்கல், தியாகம் போன்ற உணர்ச்சிப் பூர்வமான அம்சங்கள் ஆழமாக உள்ளடக்கியிருக்கும்" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கருத்துக்கள் மற்றும் கதையின் காட்சி அமைப்புகள், இந்த திரைப்படம் முழுமையான ஆக்ஷன்-இமோஷன் ஃபாமிலி என்டர்டெயினர் என அட்டகாசமாக அமையும் என உறுதியளிக்கின்றன. மேலும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், அவரை 'பொறுப்புள்ள நாயகன்', 'மாஸ் ஹீரோ', 'நல்ல உள்ளம் கொண்ட மனிதர்' என சொல்லிக்கொண்டு, இப்படத்தின் புகைப்படங்களையும் டீசர்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெற்றிநடை போடும் 'மகா அவதார் நரசிம்மா'..! ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்து புதிய சாதனை..!
ஏற்கனவே வெளியான சில பிரமோஷன் புகைப்படங்கள், பைக்கிங், ஃபைட்டிங், ஸ்டைலிஷ் தோற்றங்கள் என அனைத்திலும் சிவகார்த்திகேயன் புதிய லுக் கொண்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆகவே 'மதராஸி' திரைப்படம், தமிழில் மட்டுமன்றி பிற இந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனிருத் இசை, முருகதாஸ் இயக்கம், மற்றும் சிவகார்த்திகேயனின் நடிப்பு என மூன்றும் இணையும் இந்த கூட்டணி, திரையுலகில் ஒரு புதிய ஹிட் காம்பினேஷன் ஆக மாறும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இந்த நவீன காதல்-ஆக்ஷன் கதையுடன், இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கிய மோதல்களை புதிய கோணத்தில் சொல்லும் முயற்சியாக 'மதராஸி' உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

படம் வெளியாகும் வரை எதிர்பார்ப்பு தொடர்கிறது. செப்டம்பர் 5-ம் தேதி, திரையரங்குகளில் பண்டிகை போல் கொண்டாட தயாராகும் ரசிகர்கள் கூட்டம், இப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே இரவில் இரட்டை விருதுகளா..! நடிகை மாளவிகா மோகனன் பதிவால் கொண்டாட்டத்தில் இளசுகள்..!