இந்திய சினிமா வரலாற்றிலேயே... திரைக்கு வந்த சில மாதங்களிலேயே மக்களை அதிகம் கவர்ந்த ஒரே நடிகர் என்றால் அவர் தான் ரசிகர்களால் செல்லமாக "தல"என போற்றப்படும் நடிகர் அஜித்குமார். இவரது கம்பீரமான குரலும் பேச்சும் பார்ப்பவர்களையே சிலிர்க்க செய்யும்.

இப்படிப்பட்ட நடிகர் அஜித்குமார் தைரியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று சொன்னாலும் மறுபக்கம் விடாமுயற்சியுடன் தனது வாழ்க்கையில் போராடுபவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் நடிகர் மறுபக்கம் கார் ரேஸர். அதன் பின்பு பைக்கை எடுத்து ஊரை சுற்றும் வி. லாகர், மாணவர்களுடன் இணைந்து கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர் என திரை உலகத்தை தாண்டியும் பல படைப்புகளைப் படைப்பதில் வல்லவர் தான் நடிகர் அஜித். அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் பொழுது கட்டவுட்டுகளை வைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்யும் நடைமுறைகளை பழக்கப்படுத்தி வந்தனர்.
இதையும் படிங்க: அஜித்தின் அடுத்த படத்தில் ஹீரோயினி யார் தெரியுமா..! கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் போல..!

ஆனால் இது தனக்கு மிகவும் பிடிக்காத பழக்கம் என்று வெளிப்படையாக சொன்ன நடிகர் அஜித், இனி தன்னை யாரும் 'தல' என அழைக்க வேண்டாம் என்றும் நீங்கள் பாலபிஷேகம் செய்வதால் என்ன பயன்? எனவும் நேர்முகமாக கேள்வியை கேட்டார் . அது மட்டுமல்லாமல் நான் நடிக்கிறேன் சம்பாதிக்கிறேன் எனது குடும்பத்தை பார்க்கிறேன் எனக்கு பிடித்தவைகளை செய்கிறேன். அதேபோல் நீங்களும் படத்தை பாருங்கள் சந்தோஷமாக இருங்கள் பின்பு வேலைக்குப் போங்கள், உங்க குடும்பத்தை பாருங்கள் என ரசிகர்களுக்கு அன்போடு அட்வைஸ் செய்யும் நடிகரும் இவர் தான். அரசியல் சாயல் தன் மீது விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அஜித் ரேஸ்களுக்கு செல்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

குறிப்பாக நடிகர் தனுஷின் மாரி திரைப்படத்தில் " என்ன தான் அவர் முரட்டுத்தனமான ஆளாக இருந்தாலும் புறாவுடன் இருக்கும் பொழுது அவருக்குள் இருக்கும் வேறு ஒரு முகம் வெளியே தெரியும்" என்று சொல்வதைப் போல அஜித் "என்ன தான் திரைப்படங்களில் கரரான ஆளாக இருந்தாலும் ரேஸ்களில் ஈடுபடும் பொழுது அவருக்குள் இருக்கும் சாப்ட் முகம் வெளியே தெரியும்". அந்த வகையில் தான் சமீபத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கையால் 'பத்மபூஷன்' விருதைப் பெற்றார் நடிகர் அஜித்குமார். மேலும் இனி ரேஸ்களில் கலந்து கொள்ளும் பொழுது திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது ரேஸ்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் முழு சபதம் எடுத்து இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.

இந்த வேலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சரவெடியாக மாறியது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இத்-திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஃபேன்பாய் திரைப்படமாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித், திரிஷா, சிம்ரன், பிரபு என அனைவரையும் பார்த்த மக்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். குறிப்பாக 2025-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளது நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி'.

இப்படி இருக்க நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான 'ஏகே 64' திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இந்த சூழலில் இத்திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, தற்பொழுது கார் பந்தயத்தில் முழு கவனத்தை செலுத்தி வரும் அஜித், வருகின்ற அக்டோபர் மாதம் வரை சினிமாவிற்கு பிரேக் எடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். அதே சமயத்தில் 'ஏகே 64' திரைப்படத்தினை "ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்" தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கான முழு அறிவிப்பும் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் தற்பொழுது கிடைத்து இருக்கிறது.

இதனைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த முறை எடுக்கக்கூடிய திரைப்படம் உலக அளவில் பேமஸ் ஆக வேண்டும் என அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு வார்த்தை சொன்னாலும் அதை நச்சுனு சொன்ன நடிகர் அஜித்..! வெறுப்பில் ஹேட்டர்ஸ்..!