பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் கஜோல். 1990களில் தொடங்கி இன்று வரை, தனது தனித்துவமான நடிப்பும், அழகான தோற்றத்தாலும், பல கோடி ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். இப்படி இருக்க சமீபத்தில், மகாராஷ்டிரா அரசு ஏற்பாடு செய்த மாநில திரைப்பட விருது 2025 விழாவில், கலைத்துறையில் செய்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் கஜோலுக்கு 'ராஜ் கபூர் கௌரவ விருது' வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில், கஜோல் தனது தாய் மற்றும் நடிகையான தனுஷாவுடன் வந்திருந்தார். ஒரே மேடையில் தாயும் மகளும் விழாவில் கலந்துகொண்டதைக் கண்ட ரசிகர்கள், சினிமா பாசத்துக்கும், குடும்ப பாசத்துக்கும் இடையே அமைந்த அந்த அழகிய தருணத்திற்கு கைதட்டினர்.
இதையும் படிங்க: டபுள் ஆக்ஷனில் நடிகர் அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’..! இன்று மாலை மாஸ் திரைப்படத்தின் டீசர் வெளியீடு..!
தனது நடிப்பு திறமையால் கலைத்துறையில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ள கஜோலுக்கு இந்த விருது வழங்கப்படுவது, ஒரு மரியாதையான அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க இந்த விழா முடிந்த பின் கஜோல், அங்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அவர் ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் பேசினார். நிகழ்ச்சி மகாராஷ்டிராவில் நடைபெறுவதால் மராத்தி மொழி வழக்கமானது தான். ஆனால், ஒரு பத்திரிக்கையாளர், கஜோல் இந்தியில் பேசும்படி கேட்டார். இதனால் ஒரு நொடியில் சந்திரமுகியாக மாறிய கஜோல் முகத்தில் எதுவும் மறைக்காமல் சற்றே கடுமையான தோற்றத்துடன், "இப்போ நான் இந்தியில் பேசவேண்டுமா? நான் பேசியது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்" எனக் கூறினார். இந்தக் கருத்தை தெரிவித்தவுடன், அவர் மேடை இடத்தை விட்டு வெளியேறி சென்றார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதுடன், சமூக ஊடகங்களில் அதனைப் பற்றி பல்வேறு விதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சிலர் கஜோலின் நேர்மையான பதிலை பாராட்டியிருப்பதுடன், சிலர் அதிகக் கோபத்துடன் பதிலளித்தது தவறு எனவும் விமர்சித்துள்ளனர். மேலும் கஜோல், தனது திரைப்பயணத்தில் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 'குச்குச்ஹோதா ஹை', 'கபி குஷி கபி கம்', 'மை நேம் இஸ் கான்' போன்ற பல தரமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு, நகைச்சுவை, உணர்ச்சி, சக்திவாய்ந்த பெண்மையின் உருவாக்கம் ஆகிய அனைத்து பரிமாணங்களிலும் திறமை காட்டியவர். இப்படியாக இந்திய சினிமாவில் அவர் செய்த பங்களிப்பை மாநில அரசும், ரசிகர்களும் மறக்கமுடியாது. அவரது பணிகளை கவுரவிக்கும் விதமாக, மகாராஷ்டிரா அரசு வழங்கும் ‘ராஜ் கபூர் விருது’ பெறுவது, அவரது நீண்டகால முயற்சிக்கு கிடைக்கும் மரியாதையான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
👉🏻 நடிகை கஜோல் பேசிய வீடியோவை காண - click here 👈🏻
இந்த நிகழ்வு, மொழிப் பிரச்சினை என்பது எவ்வளவு சென்சிடிவ் விஷயமெனும் உண்மையை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. குறிப்பாக, நடிகைகள் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில், ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் பேசும் மொழியிலேயே பதிலளிக்கவேண்டும் என அழுத்தப்படுவது தற்போது ஒரு வழக்கமான அலசல் ஆகியுள்ளது. இதற்கிடையே, பலரும், “ஒருவர் எந்த மொழியில் பதிலளிக்க வேண்டுமென நிர்ணயிப்பது அவரது உரிமை” எனக் கூற, சிலர் “விளக்கமான பதில் தேவைபடுவதே பத்திரிக்கையாளர் நோக்கம்” என கருதுகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது பாலிவுட் துறையிலும், சமூக ஊடகங்களிலும் சற்றே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உண்மையில் இந்தியில் பேச மறுத்த கஜோல் தவறான செயல் செய்தாரா? அல்லது அவர் தனது உரிமையை தைரியமாக வெளிப்படுத்தினாரா? என்பதை பொது மக்களின் பார்வை தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. ஒரு பக்கத்தில் கலைத்துறையில் அவரது பங்களிப்புக்காக மாநில விருது பெற்ற மகிழ்ச்சி இருப்பினும் மற்றொரு பக்கம் பத்திரிக்கையாளரிடம் பதிலளிக்க மறுத்ததற்கான விமர்சனங்கள் என இரண்டையும் ஒரே நாளில் சந்தித்தார் நடிகை கஜோல். இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ, அவரது தைரியத்தை வெளிப்படுத்துகிறதா? அல்லது புரிந்து கொள்வதால் வந்த ஒரு சிறிய தவறா என்பது விவாதத்திற்குரிய விடயமாக உள்ளது.

இருப்பினும், அவருடைய பல ஆண்டுகால திரைப்படப் பயணம், திரைத்துறையில் அவருடைய தரம் மற்றும் பங்களிப்பு குறித்து யாரும் மறுக்கமுடியாத உண்மை என்பதும் உறுதி.
இதையும் படிங்க: காமெடி கலாட்டாவுடன் திரும்பி வருகிறது 'சுந்தரா ட்ராவல்ஸ்'..! "கூலி"க்கு முன்னாடி பிரம்மாண்ட ரீ-ரிலீஸ்..!