தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கதாநாயகிகள் வெறும் கதைக்கு துணை போகும் கதாபாத்திரங்களாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், அந்தச் சூழல் தற்போது பெரிதும் மாறியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் தங்களின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், கவர்ச்சி, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் கலவையாக ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இதையும் படிங்க: மாபெரும் வெற்றி பெற்ற OG திரைப்படம்..! இயக்குநருக்கு சொகுசு கார் பரிசு.. surprise கொடுத்த பவன் கல்யாண்..!

யாஷிகா ஆனந்த், தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமானவர்.

ஆனால் குறுகிய காலத்திலேயே, தனது போல்டான அணுகுமுறை, துணிச்சலான நடிப்பு, கவர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தாலும், அந்த பாத்திரங்களை அவர் தன்னம்பிக்கையுடன் ஏற்று நடித்த விதம், அவரை மற்ற நடிகைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டியது.

பலர் யாஷிகா ஆனந்தை வெறும் கவர்ச்சி நடிகை என்றே முத்திரை குத்த முயன்றாலும், அவர் தன்னை ஒரு சுய சிந்தனை கொண்ட நபராகவும், தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படையாக கூறும் நடிகையாகவும் அடையாளப்படுத்தி வந்துள்ளார்.

இன்றைய காலத்தில் நடிகர்களின் புகழ் திரையரங்குகளோடு மட்டும் முடிவதில்லை. சமூக வலைதளங்களும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் யாஷிகா ஆனந்துக்கு மிகப்பெரிய மேடையாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் தாராள கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: SK-வின் 'பராசக்தி' படத்தின் கதை லீக்..! குஷியில் ரசிகர்கள்.. ஷாக்கில் படக்குழுவினர்..!