தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குனராக விளங்கும் லோகேஷ் கனகராஜ், தொடக்கத்தில் வங்கி ஊழியராக பணியாயற்றினார். திரைப்பட ஆர்வம் காரணமாக 2016-ல் ‘அவியல்’ என்ற குறும்படத் தொகுப்பில் தனது பயணத்தைத் தொடங்கினார். 2017-ல் வெளியான அவரது முதல் படமான ‘மாநகரம்’, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்று, அவரை பரவலாக அறியச் செய்தது.

2019-ல் வெளியான ‘கைதி’ திரைப்படம், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) எனும் தனித்துவமான பிரபஞ்சத்தை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து ‘விக்ரம்’ (2022), ‘லியோ’ (2023) ஆகிய படங்களும் LCU-வின் ஒரு பகுதியாக அமைந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் இயக்கத்தில் விஜய், கமல்ஹாசன், கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் பணியாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் இயக்குநர் எஸ்.என் சக்திவேல் காலமானார்..!!
தற்போது, ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கியுள்ளார், இது கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. அடுத்ததாக ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளார். மேலும், ஆமிர்கான் நடிக்கவுள்ள ஒரு உலகளாவிய திரைப்படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு கேங்ஸ்டர் கதையில் நாயகனாக நடிக்க உள்ளதாக லோகேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக லோகேஷ் தனது உடல் எடையைக் குறைத்து, தாடியை வளர்த்து தன்னை தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்காக தாய்லாந்தில் நோக்குவர்மம் எனப்படும் தற்காப்பு கலையை கற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயிற்சி, படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான ஆக்ஷன் காட்சிகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷின் இந்த முயற்சி, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநராக தனது திறமையை நிரூபித்த லோகேஷ், நடிகராகவும் தனது பங்களிப்பை வெற்றிகரமாக வழங்குவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த புதிய முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்!
இதையும் படிங்க: சேலையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை மிருனாள் தாகூர்..!