பாலிவுட்டின் "பாட்ஷா" என அழைக்கப்படும் ஷாருக்கான், இந்திய சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது முத்திரையைப் பதித்தவர். 1965 நவம்பர் 2-ல் பிறந்த இவர், 1992-ல் 'தீவானா' படத்தின் மூலம் அறிமுகமானார். 'பதான்', 'ஜவான்', 'டங்கி' போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஷாருக்கான் சினிமாவைத் தாண்டி தயாரிப்பு, கிரிக்கெட் அணி, மது விற்பனை தொழில் என பல துறைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது 'டியாவோல்' மது பிராண்ட் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லொகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற முதல் இந்தியரானார். தென்னிந்திய நடிகர்களான அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் ஆகியோருடன் நட்பு பாராட்டுவதாக குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பிரபல நகைச்சுவை நடிகர் பிஷ் வெங்கட் காலமானார்.. சோகத்தில் தெலுங்கு திரையுலகம்..!
இந்நிலையில் ஷாருக் கான், தனது வரவிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படமான ‘கிங்’ படப்பிடிப்பின்போது மும்பையில் நடந்த சண்டைக் காட்சியில் பலத்த காயமடைந்துள்ளார். இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் நடைபெற்ற ஆக்ஷன் காட்சியின் போது, ஷாருக்கானின் தசைகளில் தீவிர காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மேம்பட்ட சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத காலம் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர், இதனால் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஷாருக் கான், ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, ‘கிங்’ படத்தில் தனது மகள் சுஹானா கான் மற்றும் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் 2026இல் வெளியாக உள்ளது. ஷாருக்கானின் காயம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இது அவரது தீவிர ஆக்ஷன் காட்சிகளின் போது ஏற்பட்ட தசைப் பிரச்சனையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஷாருக் கான் முன்பு ‘ரா.ஒன்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பின்போதும் பல்வேறு காயங்களுக்கு ஆளாகியுள்ளார். தற்போது, அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து, அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பார்ப்போரை வசியம் செய்து ஈர்க்கும் நடிகை கயாடு லோஹர்..! ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!