தமிழ் திரை உலகம் மட்டுமல்லாது ஃபான் இந்தியா ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவரது நடிப்பு ஒரு புறம் அழகாக இருந்தாலும் இவரது கவர்ச்சிக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ராகவா லாரன்ஸின் திரைப்படத்தில் 'கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே' என்ற பாடலுக்கு கருப்பு நிற சேலை கட்டி இவர் ஆடிய நடனம் இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படத்தில் அமீர்கான்..! ஹிட் கொடுத்து வசூலில் சாதனை..!

இன்றைய கால சிகர்களால் லட்சுமி ராய் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராய் லட்சுமி இந்திய திரைப்பட உலகில் நடிகை மற்றும் மாடலாக திகழ்ந்து வருகிறார்.

இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான 'கர்க கசதரா' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் இவரது தோற்றம் மக்களுக்கு பிடித்து போக அடுத்ததாக இயக்குனர் ஆர். பார்த்திபனுடன் இணைந்து 'குண்டக்க மண்டக்க' என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து இயக்குனர் பேரரசு இயக்கிய 'தர்மபுரி' என்ற அதிரடி மசாலா திரைப்படத்தில் 2006-ம் ஆண்டு நடித்து பலரது நெஞ்சங்களை கவர்ந்தார்.

மேலும் 2007-ம் ஆண்டு காதல் படமான 'நெஞ்சத்தைத் தொடு' என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்க 2008 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா இயக்கிய அதிரடி திரில்லர் திரைப்படமான 'தாம் தூம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படி பல படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராய் லட்சுமி உண்மையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.

இப்படிப்பட்ட ராய் லட்சுமி இதுவரை தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பாக பிரபல மாடலாக இருந்த இவர் சரவணா ஸ்டோர், ப்ரூவ் காபி மற்றும் பேரன் லவ்லி போன்ற பல விளம்பரங்களில் மாடலாகவும் நடித்திருக்கிறார்.

இப்பொழுதுவரை கவர்ச்சி நடிகையாக பார்க்கப்படும் ராய் லட்சுமி 'மங்காத்தா' திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது நெஞ்சங்களை கவர்ந்தும் இருக்கிறார்.
இதையும் படிங்க: திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் சொன்ன காட்டமான பதில்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!