இந்திய கடலோர காவல்படை, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை இணைந்து அரபிக் கடலில் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில் ரூ.1800 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், இந்திய கடலோர காவல்படை, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை அரபிக் கடலில் ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டன. போர்பந்தர் கடற்கரையில் இருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச கடல் எல்லைக்குள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றனர்.

சர்வதேச கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை கப்பலைக் கண்டதும், போதைப்பொருள் மாஃபியாவினர் தங்கள் படகிலிருந்து ஏராளமான போதைப்பொருட்களை கடலுக்குள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்திய கடலோர காவல்படை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கடலில் கொட்டப்பட்ட போதைப்பொருள் அளவைக் கண்டுபிடித்தன. விசாரணையில், அது தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் என்று கண்டறியப்பட்டது. இரண்டு அமைப்புகளும் ரூ.1800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றன.

போதைப்பொருள் எந்த வகையானது என சரியாக கணிக்கப்படவில்லை என்றாலும், கடத்தப்பட்ட இந்த போதைப்பொருட்கள் மதிப்பு அதிகம் எனக்கூறப்படுகிறது. குஜராத்தின் கடலோரப் பாதைகள் வழியாக பெரும்பாலும் கடத்தப்படும் மெத்தம்பேட்டமைன், ஹெராயின் போன்ற அதிக சக்தி வாய்ந்த போதைப்பொருட்களாக இருக்கும் என நம்பப்பப்படுகிறது. குற்றவாளிகள் தப்பிச் சென்றதால், யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் கும்பலை கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது அரேபிய கடல் வழித்தடத்தை சுரண்டும் சர்வதேச கும்பல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திடீரென மோடியை புகழ்ந்து தள்ளிய பிரேமலதா விஜயகாந்த்.. பாஜகவுடன் தேமுதிக கூட்டணியா..?

இந்த போதைப்பொருள் குஜராத் ஒரு கடத்தல் மையமாக வளர்ந்து வருவதை உணர்த்துகிறது. 2024 நவம்பரில் போர்பந்தரில் 700 கிலோ மெத்தம்பேட்டமைன் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வெற்றிகரமான பறிமுதல் நடவடிக்கை, சமீப ஆண்டுகளில் இந்திய கடலோர காவல்படை, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை இடையேயான 13வது பெரிய கூட்டு நடவடிக்கையாகும். இது தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதிலும், நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை ஒருங்கிணைப்பின் வலிமையைக் காட்டுகிறது. சவால்களுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: அம்பேத்கரே காவிதான்... திமுகவை திக.,காரன் சுரண்டி திங்கிறான்.. அர்ஜுன் சம்பத் ஆவேசம்..!