வாஷிங்டன்: அமெரிக்கா உலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில் பெரிய முடிவு எடுத்துள்ளது. இதுவரை “ரஷ்யா நமக்கு நேரடி ஆபத்து” என்று சொல்லி வந்த கொள்கையை முழுவதுமாக கைவிட்டுவிட்டது. அதற்கு பதிலாக “ரஷ்யாவுடன் நல்ல உறவு வைத்துக்கொள்ள வேண்டும், உக்ரைன் போரை விரைவில் முடிக்க வேண்டும்” என்று புதிய பாதுகாப்பு திட்டத்தில் (2025) அறிவித்துள்ளது.
2014-ல் ரஷ்யா உக்ரைனின் கிரிமியா பகுதியை எடுத்துக்கொண்டபோது, அமெரிக்கா ரஷ்யாவை “மிகப்பெரிய ஆபத்து” என்று பட்டியலிட்டது. அதன்பிறகு 2022-ல் உக்ரைன் போர் தொடங்கியதும், ரஷ்யாவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்தது, ஆயுத உதவி செய்தது. ஆனால் இப்போது டிரம்ப் அரசு அந்த பழைய கொள்கையை முழுவதுமாக மாற்றிவிட்டது. “ரஷ்யாவை எதிரியாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒத்துழைப்பு வைத்துக்கொண்டு போரை முடிப்போம்” என்று சொல்கிறது.
ரஷ்யா இதை “நல்ல தொடக்கம்” என்று பாராட்டியுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஏனெனில் இப்போது வரை அமெரிக்கா தான் உக்ரைனுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்து வந்தது. இப்போது டிரம்ப் “ஐரோப்பியர்களே உக்ரைனை காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். இது ஐரோப்பாவுக்கு பெரிய தலைவலியாக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் 500% வரி!! கடுமையான பொருளாதார தடை!! டிரம்ப் வார்னிங்!

இந்தியாவுக்கு இது மிகவும் நல்ல செய்தி. நாம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், ஆயுதங்கள் என்று பலவற்றை வாங்குகிறோம். உக்ரைன் போரினால் அமெரிக்கா “ரஷ்யாவிடம் வாங்காதே” என்று நம்மை எச்சரித்தது. ஆனால் இப்போது அமெரிக்காவே ரஷ்யாவுடன் நல்லுறவு பேசுகிறது. எனவே நமது ரஷ்ய உறவுக்கு எந்த பிரச்சனையும் வராது. நமது “நடுநிலை” கொள்கை இன்னும் வலுவாக இருக்கும்.
அமெரிக்காவின் இந்த மாற்றம் டிரம்பின் “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கையின் வெற்றி. ஐரோப்பாவை விட்டுவிட்டு, சீனாவையும் ரஷ்யாவையும் நண்பர்களாக மாற்ற நினைக்கிறார். உலக அரசியலில் இது பெரிய மாற்றம். இனி உக்ரைன் போர் எப்படி முடியும், ரஷ்யா-அமெரிக்கா உறவு எப்படி மாறும் என்று உலகமே ஆர்வமாகப் பார்க்கிறது.
இந்தியாவுக்கு இது “பொன் வாய்ப்பு”. ரஷ்யாவுடன் நெருக்கமாகவும், அமெரிக்காவுடன் நல்லுறவாகவும் இருக்க முடியும். நமது பிரதமர் மோடியின் “நடுநிலை” கொள்கை இப்போது உலகமே பாராட்டும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - சீனா மீண்டும் கைகோர்ப்பு! ஷாங்காயில் பிரமாண்ட தூதரகம் திறப்பு! புதிய அத்தியாயம் துவக்கம்!