உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் தலைமையை விட்டு விலகப் போவதாகக் கூறி, தனக்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த செய்தி!
ஆனால், டெஸ்லாவின் வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஆஸ்டின் நகரில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் நடந்த இந்தக் கூட்டம், நிறுவனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமானதாக அமைந்தது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் ராபின் டென்ஹோம், எலான் மஸ்க் இல்லாமல் நிறுவனம் பெரும் இழப்பைச் சந்திக்கும் என்று எச்சரித்தார். "மஸ்க் இருந்தால்தான் டெஸ்லாவின் பங்கு விலை உயரும், எதிர்காலம் பிரகாசமாகும்" என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!
ஏஐ மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் கடும் போட்டி நிலவும் இந்தக் காலத்தில், மஸ்கின் தலைமை இன்றியமையாதது என்று பங்குதாரர்களும் உணர்ந்தனர். அதனால்தான், மொத்த பங்குதாரர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்தனர்.
இந்த ஒப்புதலால், எலான் மஸ்க் அடுத்த 7 ஆண்டுகளுக்கு டெஸ்லாவில் தொடர்வது உறுதியாகியுள்ளது. சம்பளம் பணமாகக் கிடையாது. அடுத்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் பங்குகளாக வழங்கப்படும்.

தற்போது டெஸ்லாவின் சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டாலர்கள். இதை 8.5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஒரு டிரில்லியன் டாலர்கள் என்றால், இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் கோடி ரூபாய்! இது உலக சாதனையாக அமையும்.
இந்த முடிவுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த எலான் மஸ்க், நிறுவனத்தை மேலும் உயர்த்துவேன் என்று உறுதியளித்தார். ஆனால், சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. 'டெஸ்லா டேக்டவுன்' என்ற சமூக ஆர்வலர் குழு, மஸ்கின் அரசியல் கருத்துகள் காரணமாக பங்கு விலை வீழ்ச்சியடைந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இருந்தாலும், பங்குதாரர்களின் பெரும்பான்மை ஆதரவு இந்தச் சர்ச்சையை மீறி நிற்கிறது. டெஸ்லாவின் எதிர்காலம் இப்போது மஸ்கின் கைகளில் உறுதியாக உள்ளது.
இதையும் படிங்க: பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!