2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததுடன், அவருக்கு தேர்தல் நிதியையும் வாரி இறைத்தவர் எலான் மஸ்க். இதையடுத்து, ஜனவரி மாதம் அவர் அதிபர் ஆனவுடன் அரசாங்க செயல்திறன் துறையில் (DOGE), எலான் மஸ்கிற்கு தலைமை ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டது. இது, அரசின் செலவினங்களைக் குறைக்கும் துறையாகச் செயல்பட்டது. இந்தத் துறை மூலம் தேவையற்ற நிதிகள் நிறுத்தப்பட்டன. தவிர, பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது, அமெரிக்காவில் போராட்டத்திற்கும் வழிவகுத்தது.
ஒருகட்டத்தில், இதனால் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் சரிவையும் சந்தித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் தலைமை நிறுவன அதிகாரி மாற்றப்படலாம் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதை எலான் மஸ்க் மறுத்திருந்தார்.

இதற்கிடையே அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிகப்பெரிய கனவான ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) மசோதாவுக்கும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் அதிகரித்தது. அந்த மசோதாவை எலான் மஸ்க் தொடர்ந்து விமர்சித்ததன் காரணமாகவே அவர்களுக்குள் முட்டல் மோதல் தொடர்ந்தது.
இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய மஸ்க்! புலம்பித் தவிக்கும் ட்ரம்ப்.. மூன்றாவது கட்சி சறுக்குமா? சாதிக்குமா?
அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இதற்கு 1.2 மில்லியன் பயனர்கள் “ஆம்” எனப் பதிலளித்திருந்தனர். இது, அதிபர் ட்ரம்புவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிபர் ட்ரம்பை மோசமாக விமர்சித்ததற்காக எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டார். அதை, ட்ரம்ப் பெரும்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், மீண்டும் அவர்களுக்குள் மோதல் வெடித்தது. ”ட்ரம்ப் நிறைவேற்ற உள்ள வரி சீர்திருத்த மசோதா நாட்டுக்குப் பெரும் சுமையாக அமையும் என்றும் அது மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டால் தான் புதிய கட்சி தொடங்குவது உறுதி” என்றும் மஸ்க் கூறியிருந்தார்.
இதற்கிடையே, ட்ரம்பின், ’பிக் பியூட்டி ஃபுல்’ மசோதா கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவேறப்பட்டது. இதையடுத்து, எலான் மஸ்க் சொன்னதுபோலவே களத்தில் குதித்துவிட்டார். ஆம், ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற புதிய அரசியல் கட்சி துவங்கி உள்ளார். இதிலும் மற்றொரு சிறம்பம்சமாக, தனது கட்சியின் பொருளாளராக வைபவ் தனேஜாவை நியமனம் செய்துள்ளார் எலான் மஸ்க். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

எலான் மஸ்க்கின் `டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டவர் வைபவ் தனேஜா. இவரது நியமனத்திற்கு அமெரிக்கர்கள் சிலர் மத்தியில் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் ஒருவரை நியமிப்பதா? என எலான் மஸ்க் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
முன்னதாக, அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் கீழ் தான் வாழ்கிறோம் என்பது தெரிகிறது" என தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போருக்கு பின் இதுவே முதன்முறை.. மக்கள் மத்தியில் தோன்றிய காமெனி..