அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், அது ஒரு பிராந்தியப் போராக வெடிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தெஹ்ரானில் நடைபெற்றக் கூட்டத்தில் உரையாற்றிய அலி காமேனி, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுத்த காமேனி அமெரிக்கர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவர்கள் இந்த முறை போரைத் தொடங்கினால், அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும். இது ஈரானோடு மட்டும் நிற்காது, மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்று எச்சரித்தார். நாங்கள் போரைத் தூண்டுபவர்கள் அல்ல; எந்த நாட்டின் மீதும் முதலில் தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், ஈரானிய தேசத்தைச் சீண்டினால், தாக்குதல் நடத்துபவர்கள் மீது மிகக் கடுமையானப் பதிலடி கொடுப்போம் என்று ஆவேசமாகத் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து விடுத்து வரும் மிரட்டல்களைக் கிண்டல் செய்த அவர், எங்கள் மக்கள் இந்த மிரட்டல்களைக் கண்டு அஞ்சமாட்டார்கள்" என்றார்.
இதையும் படிங்க: டிரம்பின் மாஸ்டர் பிளான்: காசா "அமைதி வாரியத்தில்" இணைய இந்தியாவுக்கு அழைப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்றது முதல் ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தம் கொள்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பலான USS Abraham Lincoln தலைமையிலான ஒரு பெரும் படை அரேபிய கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையானத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: “வெனிசுலா இனி அமெரிக்கத் தயாரிப்புகளை மட்டுமே வாங்கும்!” டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!