பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவால் உருவாக்கப்பட்ட புதிய சூப்பர் இன்டலிஜென்ஸ் பிரிவின் பொறுப்பை 28 வயது இளைஞர் அலெக்சாண்டர் வாங்கிற்கு மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தூக்கி கொடுத்திருப்பது ஒட்டுமொத்த ஏஐ உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க் AI-யில் ஒரு பெரிய மைல்கல் சாதனை படைக்க முயற்சித்து வருகிறார். இதற்காக ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த ஜாம்பவான்களை எல்லாம் மெட்டா வேலைக்குச் சேர்ந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஸ்கேல் ஏஐ என்ற நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை மார்க் வாங்கியிருக்கிறார். இதற்காக மெட்டா 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 1.2 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது. அத்துடன் ஸ்கேல் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அலெக்சாண்டர் வாங் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அலெக்சாண்டர் வாங் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் பிறந்தார். சீனாவைச் சேர்ந்த அவரது பெற்றோர் அமெரிக்க விமானப்படையில் விஞ்ஞானிகளாக பணிபுரிந்தனர். கணிதம் மற்றும் கோடிங்கில் ஆர்வத்துடன் விளங்கிய வாங், ஆறாம் வகுப்பிலேயே தேசிய அளவிலான கணிதம் மற்றும் கோடிங் போட்டிகளில் சாதனை படைத்தவர். அவர் மதிப்புமிக்க மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) சேர்ந்தாலும், ஸ்கேல் AI ஐத் தொடங்க தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். இன்று, அவர் AI உலகின் இளைய மற்றும் மிகவும் வெற்றிகரமான தொழில்முனைவோர்களில் ஒருவர். மெட்டாவில் இந்தப் புதிய பணியின் மூலம், அலெக்சாண்டர் வாங் நிறுவனத்தின் எதிர்கால AI திட்டங்களுக்கு புதுமை மற்றும் துணிச்சலான தலைமையைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பேரூர் பட்டீஸ்வரர் கோயில் ஆகம விதிகளை மீறிய குருக்கள் மீது பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...!
இதையும் படிங்க: சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!