ஆன்லைன் ஷாப்பிங் மீதான ஆர்வம் உலகளவில், குறிப்பாக இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வசதி, பலதரப்பட்ட தயாரிப்புகள், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் சந்தை 2027-க்குள் 74 பில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ல் இந்தியாவில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆன்லைன் ஷாப்பர்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் பண்றது யாருக்கு தான் பிடிக்காது. பல பேருக்கு ஷாப்பிங் HOBBY ஆக இருக்கும். அதுவும் இளைய தலைமுறைக்கு சொல்லவா வேண்டும். தற்போது இருக்கும் கால சூழ்நிலையில் எல்லாமே ஆன்லைனில் கிடைக்கும் சூழல் நிலவுகிறது. கடைக்கு போகவேண்டும் என எந்த நிர்பந்தமும் இல்லை. ஒரு செல்போன் இருந்தால் எல்லாவற்றையும் ஆர்டர் செய்து வாங்கி விடலாம். அதையே வேலையாக வைத்திருக்கும் ஒரு நபரை பற்றிதான் பார்க்க போகிறோம் சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த வாங் என்ற 66 வயது பாட்டி தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

இந்த பாட்டி ஆன்லைனில் ஷாப்பிங் செய்து தனது பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். வீடு முழுவதும் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொட்டலங்கள் தான் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. அதில் பல பொட்டலங்கள் பிரித்து பார்க்கப்படாமலே உள்ளது. அப்படி பிரிக்கப்படாத பொருட்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் அவர், வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார். தான் வாங்கிய பொருட்களை அந்த வீட்டில் குவித்து வைத்திருக்கிறார்.
அதில் பல உணவு பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், பொருட்களை அடைத்து வைத்திருப்பதால் தங்கள் வீடுகளில் பூச்சித் தொல்லைகள் அதிகரித்து இருப்பதாகவும், அக்கம்பக்கத்தார் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அந்த பாட்டி ஆன்லைன் ஆர்டர் செய்வதை விடுவதில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!
இதையும் படிங்க: மக்களை மிரட்டும் பேய் மழை... பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு; வெள்ளப்பெருக்கு... தப்பிக்குமா சீனா?