பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், பலூசிஸ்தான் ஒரு தனித்துவமான பிராந்தியமாக இருந்தது. 1947 -ல் இந்தியப் பிரிவினையின் போது, பலூசிஸ்தானின் பெரும்பகுதி பாகிஸ்தானுடன் இணைந்தது. கலாத் உள்ளிட்ட சில பகுதிகள் முதலில் சுதந்திரத்தை அறிவித்தன. ஆனால் பின்னர் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டன.

பலூசிஸ்தான் மேற்கில் ஆப்கானிஸ்தான், ஈரானுடனும், தெற்கில் அரேபியக் கடலுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவுடன் நேரடி எல்லை இல்லை. ஆனால் இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு அருகில் உள்ளன.
2016- இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் பலூசிஸ்தானை குறிப்பிட்டு, அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை எழுப்பினார்.பலூசிஸ்தானில் பலூச் படை போராளிகள் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் கோருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த சிலர் இந்த இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும், இந்திய அரசு இதில் நேரடியாக தலையிடவில்லை.

இதையும் படிங்க: ஐபிஎல் நடத்திப்பார்...ரத்த ஆறு ஓடும்! சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம். ஆனால் மக்கள்தொகை அடர்த்தி குறைவு. இது இயற்கை வளங்கள், குறிப்பாக எரிவாயு மற்றும் தாதுக்கள் நிறைந்தது. 1948-ல் பாகிஸ்தானுடன் இணைப்பு, பலூச் தலைவர்களால் கட்டாயமாக நடந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. 1970- 2000களில் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
பலூச் மக்கள் பாகிஸ்தான் அரசு தங்கள் வளங்களைச் சுரண்டுவதாகவும், பொருளாதார, அரசியல் உரிமைகளை மறுப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மனித உரிமை மீறல்கள், காணாமல் போதல், இராணுவ அடக்குமுறைகளால் பலூச் மக்கள் கடுமையான சித்திரவைதகைகளை அனுபவித்து வருகின்றனர்.

பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் 2000 முதல் அரசு நிறுவனங்கள், பாதுகாப்புப் படைகள், சீன நிறுவனங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.2025 ஏப்ரல்-மே மாதங்களில் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. சமூக ஊடகங்களில் பலூச் மக்கள் "பாகிஸ்தான் முர்தாபாத்" மற்றும் "இந்தியா ஜிந்தாபாத்" கோஷங்களை எழுப்பினர்.
2025 மே மாதத்தில், காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல்களை நடத்தியது, இது பலுசிஸ்தான் போராட்டத்திற்கு மறைமுக ஆதரவாக பலூச் ஆர்வலர்களால் பார்க்கப்பட்டது.

பலூச் ஆர்வலர்கள் இந்தியாவிடம் இருந்து ஆதரவு கோரியுள்ளனர், மேலும் பாகிஸ்தான் இந்தியாவின் உளவு அமைப்பான ரா இந்த இயக்கங்களுக்கு நிதியுதவி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளது. இந்தியப் பிரதமர் மோடி 2016-ல் பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்களை விமர்சித்தார், இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிலர் பலுசிஸ்தான் விரைவில் தனிநாடாகும் என்று கூறி வரும் நிலையில், பலூசிஸ்தானை சேர்ந்த மியார் பலூச் தனது எக்ஸ்தளப்பதிவில், ''புதிய பாகிஸ்தான் எனப்படும் பஞ்சாபிஸ்தானின் சாத்தியமான வரைபடம் சிறியதாகி வருகிறது.

அதன் 3 மாவட்டங்களான தேரா காசி கான், ராஜன்பூர், ரஹிம்யர் கான் 1847-ல் ஆங்கிலேயர்களால் பஞ்சாபில் இணைக்கப்பட்ட பலூசிஸ்தானில் மீண்டும் இணைகிறார்கள்.இப்போது பலூசிஸ்தான் இந்தியாவிற்கு நிலத்தால் நெருக்கமாக உள்ளது. புதிய பாகிஸ்தான் எனப்படும் பஞ்சாபிஸ்தானுக்கு வருக!

தேரா காசி கான் 70 கிமீ2, ராஜன்பூர் 12,319 கிமீ2 ரஹிம்யர் கான் 11,880 கிமீ2 பலூசிஸ்தானில் 3 மில்லியன் மக்கள் தொகையுடன் இணைகிறது. பஞ்சாப் ஆக்கிரமித்த பலூசிஸ்தான்'' எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் வரைபடத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சோனமுத்தா போச்சா... சொந்த நாட்டுக்குள்ளேயே பாதுகாப்பு இல்ல... 20 பாகிஸ்தான் வீரர்கள் காலி...!