ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்க வேண்டாம் என்று ரஷ்யா அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் உதவி மத்திய கிழக்கை சீர்குலைக்கும் என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. தெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தெஹ்ரான் அருகே ஈரானால் அதிநவீன இஸ்ரேலிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அடுத்த 48 மணிநேரம் அமெரிக்கா போரில் பங்கேற்குமா என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கிற்கு அதிக படைக்ளை அனுப்பி அதன் இராணுவ தயார்நிலையை வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க தயாராகி வருவதாகவும், அதைத் தடுக்க தேவையான அனைத்தையும் செய்வேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் கூறியிருந்தார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதில் டிரம்ப் இஸ்ரேலுடன் இணைவார் என்று கூறப்படுகிறத்ஹு. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் உயர் இராணுவத் தலைவர்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலை ரஷ்யா ஏற்கனவே கடுமையாக கண்டித்திருந்தது. ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைக் கொண்டு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!
அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கையை ஈரான் நிராகரித்தது:
இஸ்ரேலுடனான மோதலில் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இறுதி எச்சரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது. போர் தொடங்கிவிட்டது என்றும், ஈரான் சரணடையாது என்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறியுள்ளார். ஈரானிய தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயதுல்லா அலி காமேனி, “எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும்” என எச்சரித்தார்.

ஈரான் போரினால் போரை எதிர்கொள்ளும், வெடிகுண்டினால் குண்டு வீசும். ஈரான் எந்த அச்சுறுத்தல்களுக்கும் அல்லது உத்தரவுகளுக்கும் அடிபணியாது. இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிட்டால், அது சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்கர்களுக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும் என்று ஈரானிய உச்ச தலைவர் கூறியிருந்தார்.
அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா:

ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், “இஸ்ரேலுக்கு நேரடி அமெரிக்க இராணுவ உதவி மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று எச்சரித்தார். அப்படி நேரடியாக உதவுவது ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான நிலைமையை இன்னும் மோசமானதாக மாற்றும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!