பிலடெல்பியாவிலிருந்து 418 பயணிகளுடன் வந்த விமானம் பாதி வழியிலேயே மிட்வே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பிலடெல்பியாவிலிருந்து சிகாகோ செல்லும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் பயணி தனது உடைகளை கழட்டிவிட்டு, நிர்வாணமாக தனது இருக்கையில் மலம் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விமானத்தை சுத்தப்படுத்துவதற்காக பிலடெல்பியாவிலிருந்து 418 பயணிகளுடன் வந்த விமானம் மிட்வே விமான நிலையத்தில் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது.
சிகாகோவின் மிட்வே விமான நிலையத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், பயணிக்கு என்ன ஆனது என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சம்பவத்தால் விமானத்தை முற்றிலும் சுத்தப்படுத்துவதற்காக சேவை ரத்து செய்யப்பட்டு, பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எங்கள ஏன் கூப்பிடல? ஆத்திரத்தில் நிர்வாகிகள்...தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
இதுகுறித்து சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிலைமைக்கும் விமானத்தால் ஏற்பட்ட பயண தாமதத்திற்கும் எங்கள் குழு விமானத்தில் இருந்த பயணிகளை அணுகி மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை விட சவுட்வெஸ்ட் ஏர்லைன்ஸுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. எங்கள் விமானக் குழுவினரின் தொழில்முறையை நாங்கள் பாராட்டுகிறோம்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் உட்புறம் திடீரென பெயர்ந்தது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் அதனை தங்களது கைகளால் தாங்கிப்பிடித்தனர். உடனடியாக விமான ஊழியர்கள் அதனை டக்ட் டேப்பைப் கொண்டு சரி செய்தனர். அதன் பின்னர் பயணிகள் தங்களது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பல மணி நேரம் பயணித்து அட்லாண்டாவிலிருந்து சிகாகோவுக்குச் வேறு விமானத்தில் ஏற்றிவிடப்பட்டனர். உலகம் முழுவதும் அடுத்தடுத்து நிகழும் விமானம் தொடர்பான விநோத சம்பவங்கள் மற்றும் விபத்துகள் பயணிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: சாதி, மத கண்ணோட்டத்தில் நீதிபதிகள்! இன்பீச்மென்ட் கொண்டு வர முடியுமா? திமுக சவால்