மகாராஷ்டிராவில் மாலேகானில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் வரும் ஜூலை மாதம் 31ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்கள் இருப்பதால் தீர்ப்பை வழங்க சிறிது அவகாசம் தேவை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்பட 7 பேருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 16 இன் கீழ் மரண தண்டனை விதிக்க என என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் கோரியுள்ளது.
இதையும் படிங்க: வான் பாதுகாப்பை முற்றாக அழித்த இந்தியா... பாக்., ராணுவத்துக்கு மரண அடி..! சீனாவுக்கும் பெரும் தோல்வி..!
2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடக்கில் 200 கி.மீ தொலைவில் உள்ள மாலேகானில் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த தேசிய விசாரணை முகமை 323 பேரை சாட்சியங்களாகச் சேர்த்தது, 34 பேர் அரசு தரப்பு சாட்சியங்களாக மாறினர்.

இந்த வழக்கில் லெப்டினெ்ட் கர்னர் பிரசாத் புரோஹித், பாஜக தலைவர் பிரக்யா சிங் தாக்கூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயே, அஜெய் ரஹிர்கார், சுதாகர் துவேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி ஆகியோர் மீது என்ஐஏ குற்றம்சாட்டி சட்டவிரோத தடுப்புக்காவல் சட்டத்தின் கீழும் ஐபிசி பிரிவின் கீழும் கைது செய்தது.
இந்த வழக்கு முதலில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர் விசாரித்தனர், பின்னர் 2011ல் என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ விசாரணை நடத்தி, 1500 பக்கங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது, குற்றம்சாட்டப்பட்டவர்கள், என்ஐஏ தரப்பிலும் இறுதிவாதங்கள் நடந்து முடிந்தன.

ஏறக்குறைய 17ஆ ண்டுகள் நடந்த வழக்கின் விசாரணை முடிந்தநிலையில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே. லஹோத்தி தீர்ப்பை மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது, நீதிபதி லஹோத்தி கூறுகையில் “ வழக்கில் ஏராளமான பக்கங்கள் இருப்பதால் ஆழமாகப் படித்துப் பார்க்க வேண்டியிருப்பதால் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நேரில் வர வேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணைக்கு எடுத்த என்ஐஏ, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக தலைவர் சாத்வி பிரக்யா தாக்கூருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இல்லை எனக் கூறி விடுவிக்க முயன்று அதன்போக்கில் செயல்பட்டது. ஆனால், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிய என்ஐஏ, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தடுப்புக்காவல், ஐபிசி பிரிவின் கீழ் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவேண்டும் எனக் கோரியுள்ளது.
சாத்வி பிரக்யா தாக்கூருக்கு ஆதரவாக என்ஐஏ செயல்பட்டு அவரை விடுவிக்க முயன்றதைக் கண்டித்த அரசுதரப்புவழக்கறிஞர் ரோஹினி சலியன் வெளிப்படையாகவே என்ஐஏ அமைப்பை விமர்சித்தார், சாத்வி பிரக்யா தாக்கூரை காப்பாற்ற என்ஐஏ முயல்கிறது என விமர்சித்திருந்தார்.அதன்பின் என்ஐஏ நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது.

2008 மாலேகான் குண்டுவெடிப்புதான் நாட்டிலேயே முதல்முறையாக வலதுசாரி இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா சிறப்பு தீவிரவாதத் தடுப்புப்படை சாத்வி பிரக்யா சிங் தூக்கார்தான் முக்கியக் குற்றவாளி என்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாக். திட்டத்தை தவிடுபொடியாக்கிய இந்தியா.. பதிலடி தாக்குதல் முயற்சியில் படுதோல்வி!!