சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இணையதளம் வாயிலாக மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இரண்டாம் நிலை கல்வி வாரியம் (CBSE) இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.gov.in மற்றும் results.cbse.nic.in ஆகியவற்றில் 10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 வரை நடைபெற்ற பொது தேர்வுகளுக்கான முடிவுகள், வழக்கமான மே மாத அறிவிப்புக்கு முன்னதாகவே வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைத் தேர்வு முறை (Two-Board System) காரணமாகவே முடிவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டத் தேர்வுகள் மே 15ஆம் தேதி தொடங்குவதால், முதல் கட்ட முடிவுகள் ஏப்ரல் மாதத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் ரோல் நம்பர், பள்ளி எண், அட்மிட் கார்ட் ஐடி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்கள் மதிப்பெண்களைப் பார்த்துக் கொள்ளலாம். ஆப் மூலமும் முடிவுகளை எளிதாக அணுக முடியும்.
இதையும் படிங்க: வந்தது புதிய மாற்றம்.. 2026-2027முதல் 3-வது மொழி கட்டாயம்..!! CBSE அதிரடி அறிவிப்பு..!!
இந்த முடிவுகள் வெளியீட்டால், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். உயர் கல்விக்கான அடுத்த கட்ட திட்டமிடல்கள் இப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் தாள்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சரிபார்ப்புகளை மேற்கொள்ளுமாறு CBSE அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!