வங்கத்தின் மேற்கு-மத்திய பகுதியில் உருவான கடுமையான புயல் 'மோன்தா' (Mon-Tha) தனது வேகத்தை அதிகரித்துள்ளது. முன்னதாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் இப்போது 15 கி.மீ. வேகத்தில் வட-வடமேற்கு நோக்கி செல்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிக்கையின்படி, தற்போது மோன்தா புயல் மசூலிபட்டடினத்திற்கு தெற்கு- தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தெற்கு- தென்மேற்கே 150 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்மேற்கே 250 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்மேற்கே 480 கி.மீ. தொலைவிலும் ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்மேற்கே 480 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்தப் புயல் இன்று (அக்டோபர் 28) மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திரப் பிரதேச கரையைத் கடக்கிறது. மசூலிப்பட்டினம் முதல் கலிங்கபட்டினம் வரையிலான கரையோரப் பகுதிகளை, குறிப்பாக காக்கிநாடா அருகே தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் 90-100 கி.மீ./மணி நீடித்து, 110 கி.மீ./மணி வரை வீசலாம். இதனால் கடல் கொந்தளிப்பாக இருக்கும், அலைகள் 2-4.7 மீ. உயரம் கொண்டதாக இருக்கும். கரையோரப் பகுதிகளில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது, இது வெள்ளம், மின்சார செயலிழப்பு, மரங்கள் வீழ்ச்சி, போக்குவரத்து குழப்பம் ஏற்படுத்தலாம்.
இதையும் படிங்க: மிரட்டப்போகும் 'மோன்தா'..!! சென்னையில் இருந்து எத்தனை கி.மீ தூரத்தில் இருக்கு புயல் சின்னம்..??
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு முழுமையான தயாரிப்புகளைச் செய்துள்ளது. 23 மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 800 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, 25 NDRF குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன. கரையோர மாவட்டங்களில் (கிருஷ்ணா, கோதாவரி, விசாகப்பட்டினம்) ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதோடு, விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்கல் படகுகளை கரையில் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புயலால் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காக்கிநாடா, மசிலிப்பட்டினம், குண்டூர், காவாளியில் கனமழை பெய்து வருகிறது. புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஒடிசா அரசும், ஆந்திர அரசும் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் புயல் இந்த மழைக்காலத்தின் முதல் பெரிய பாதிப்பாக இருக்கும். அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
இதையும் படிங்க: தீவிர புயலாக வலுப்பெறும் 'மோன்தா'..!! வரும் 28ம் தேதி கரையை கடக்கும்..!!