இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது.
இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த செயல்முறை மூலம், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைகளை உருவாக்குவதுண்டு. இதேபோல், 2024-2025 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: போரின் அடிப்படையே நமது பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு தெரியவில்லை.. ராகுல்காந்தி விளாசல்..!!
சில தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புனையப்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி பீஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் விவாதிக்க வேண்டும் என்று எதிர் கட்சி எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு இதற்கு இன்னும் செவி சாய்க்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து விவாதிக்க கோரி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
அதற்கும் எவ்விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைமுறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவைத் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்கட்சி எம்பிகள் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: #BREAKING: பகல்காம் தாக்குதலுக்கு பழி தீர்த்தோம்.. மக்களவையில் அமித் ஷா அனல் பறக்கும் பேச்சு..!