நலிவடைந்த தொழிலாளர் பெயரில் ஒதுக்கப்பட்ட சொத்தை தனது மனைவி பெயரில் மாசுபிரமணியன் மாற்றியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணனுக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை, மா. சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது (1996-2006) அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2019-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மா. சுப்பிரமணியன் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை விரைவாக விசாரிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா குற்றச்சாட்டு பதிவுக்காக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆஜராகவில்லை என்றாலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மா. சுப்பிரமணியன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க: எதுக்காக காலம் கடத்துறீங்க? தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி!
இந்த விவகாரத்தில் தற்போது வரை அந்த சொத்து என்பது அரசின் பேரிலேயே உள்ளது என்று மாசுபிரமணியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் என்கின்ற தோல்வி அடைந்த நபர் அரசியல் காழ்ப்புணர்ச்சியா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்றும் கூறப்பட்டது. வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், அமைச்சர் மா சுப்பிரமணியன் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி..!