மஹாராஷ்டிராவின் மும்பையில், புறாக்களுக்காக ஜெயின் சமூகத்தினர் தனி அரசியல் கட்சி துவங்கியுள்ளது. 'ஷாந்தி தூத் ஜன் கல்யாண் கட்சி' (SDJKP) என்ற பெயரில் புறா சின்னத்துடன் துவங்கிய இந்தக் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் ஜெயின் சமூகத்தின் வாக்குகளால் வெற்றி பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. பி.எம்.சி. (மும்பை மாநகராட்சி) தேர்தல் நடக்கவில்லை என்பதால், இது அரசியல் கட்சிகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜக-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. நாட்டின் வளமான உள்ளாட்சி அமைப்பான பி.எம்.சி., 74,000 கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் இயங்குகிறது. 2017 முதல் தேர்தல் நடக்கவில்லை. தற்போது அரசு நிர்வாகத்தால் மட்டுமே நடத்தப்படுகிறது. வார்டு மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு, சட்ட சிக்கல்கள் காரணமாக தேர்தல் தாமதமாகியுள்ளது.
மும்பையில் உள்ள இந்தியா கேட் பகுதி போல தாதர் புறநகர் பகுதியில், ஜெயின் சமூகத்தினர் ஆயிரக்கணக்கான புறாக்களுக்கு உணவு, நீர் கொடுத்து பராமரித்து வருகின்றனர். புறா எச்சங்களால் தோல் நோய் பரவும் அபாயம் காரணமாக, பி.எம்.சி. கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. இதை எதிர்த்து ஜெயின்கள் சாலைகளில் உணவளித்து போராடினர். போலீஸ் நடவடிக்கைக்குப் பின், அவர்கள் தனி அரசியல் கட்சி துவங்க முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: சிபிஐ க்கு மாறிய கரூர் வழக்கு... மீண்டும் நீதிமன்ற காவல்? தவெக நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜர்...!

உடனே 'ஷாந்தி தூத் ஜன் கல்யாண் கட்சி', புறா சின்னத்துடன் கட்சி துவங்கியது. ஜெயின் தலைவர்கள், தாதரில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் அறிவித்தனர். கட்சி, புறாக்கள், பசுக்கள் உள்ளிட்ட விலங்குகள் பாதுகாப்புக்கு முக்கிய கோரிக்கையாக இடம் பிடித்தது. "புறா அமைதியின் சின்னம்" என ஜெயின் முனி நிலேஷ் சந்திர விஜய் தெரிவித்தார். அரசு தடையை திரும்பக் கொடுக்காவிட்டால், போராட்டம் வெடிக்கும், தேர்தல் போட்டியிடுவோம் என அச்சுறுத்தியுள்ளனர்.
மும்பை, சுற்றுப் பகுதிகளில் ஜெயின்கள் கணிசமானோர் வசிப்பதால், உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள், பி.எம்.சி. கட்டுப்பாட்டை இழக்கலாம் என கலங்குகின்றன. சிவசேனா (UBT), ஜெயின் தலைவர்களின் வார்த்தைகளை 'அச்சுறுத்தல்' என விமர்சித்துள்ளது. ஜெயின் சமூகம், பாஜகவுடன் பழைய உறவை சாடி உள்ளனர்.
இந்த சம்பவம், மும்பை அரசியலில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. புறா தடை, தேர்தல் அரசியலாக மாறியுள்ளது. பி.எம்.சி. தேர்தல் எப்போது நடக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: பீகாரிலும் வெடிக்கும் தந்தை - மகன் மோதல்! தொகுதிகளை அறித்த லாலு! தேஜஸ்வி அப்செட்!