ராபர்ட் ப்ரூஸ் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். 2024 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வலுவான பிரதிநிதியாக உருவெடுத்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 5,02,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 3,36,676 வாக்குகள் பெற்றார். ராபர்ட் ப்ரூஸ், நயினார் நாகேந்திரனை 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த நிலையில் நெல்லை மக்களவைத் தொகுதியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து, பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, ராபர்ட் ப்ரூஸ் தனது பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டுகிறது.2025 ஜூன் 19 மற்றும் ஜூன் 26 ஆகிய தேதிகளில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, ராபர்ட் ப்ரூஸின் சொத்து மற்றும் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதையும் படிங்க: ஸ்டிக்கரில் கவனம் செலுத்தி செயலில் கோட்டை விட்ட திமுக! முதல்வர் மருந்தகத்தை விமர்சித்த நயினார்..!
இந்த நிலையில் ராபர்ட் ப்ரூஸ் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக தமிழக பாஜக தலைவர் நையினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எம் பி ராபர்ட் ப்ரூஸ் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதித்ததோடு ராபர்ட் ப்ரூஸ் மனு மீதான விசாரணையை இருபதாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: வருங்கால துணை முதல்வரே! நிர்வாகியின் பேச்சால் அதிர்ச்சியான நயினார்...