காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல் மறுநாள் அதிகாலை வரை நீடித்தது. விடிய விடிய நடந்த மோதலில் பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. இருந்தபோதிலும் ஒரு சில பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

இதனிடையே ஆபரேஷன் சிந்தூரில் ஒருபுறம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாலும் மறுபுறம் இந்திய விரர்கள் சிலரையும் நாம் இழந்துள்ளோம். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக வைத்து மிசைல் தாக்குதல் நடத்தியது. அப்போது 05 ஃபீல்ட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த லான்ஸ் நாயக் தினேஷ் குமார் என்பவர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்திய எல்லைப்பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ஆந்திராவை சேர்ந்த முரளி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.

இதேபோல், காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மராட்டிய ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த சிப்பாய் சச்சின் வனான்ஜி என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் தொடங்கிய எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில், சப் - இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில் முகமது இம்தியாஸ் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இவர்கள் மட்டுமின்றி விமானப்படை வீரர் கமல் கம்போஜ், சிபாய் அமித் சவுத்ரி, IAF சார்ஜென்ட் சுரேந்திர மோக்ரா மற்றும் சிபாய் சூரஜ் யாதவ் ஆகியோரும் ஆபரேஷன் சிந்தூரரில் தங்களது உயிரை நாட்டுக்கான தியாக செய்தனர்.
இதையும் படிங்க: தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!