ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ் தனது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தனது பெயரை பட்டியலில் கண்டறிய முடியவில்லை என்றும் பழைய வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு தேடிய போது கண்டறிய முடியவில்லை என்று கூறி இருந்தார்.
தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் நான் எப்படி தேர்தலில் போட்டியிடுவது எனவும் இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் மற்றும் வாக்களிப்பு உரிமை பறிக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இருந்தப்பவே முதுகுல குத்துனாங்க! பிரேமலதா ஆதங்கம்..!
இவரது குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியது. இந்த விவகாரம் பீகாரில் ஏற்கனவே சர்ச்சையாக இருந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேலும் சிக்கலாக்கியது. 2003-க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாக RJD, இது தவறான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு, எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பெயர்களை நீக்குவதற்கு வழிவகுக்கும் என்று விமர்சித்து வந்தன.

தேஜஸ்வி யாதவியின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளது என்றும் ஆனால் அவர் தனது பழைய EPIC நம்பரை கொண்டு தேடியதால் பெயரை கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்தது
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் ஆணையத்திடமிருந்து தனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை என கூறினார். ஆனால் பாட்னா பதிவுத்துறை இடம் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதாகவும் அதற்கு உரிய பதிலை தான் அளிப்பேன் என்றும் கூறினார்.
இரண்டு EPIC எண்கள் பிரச்சனையாக இருந்தால், யார் தவறு என்று கேட்டுள்ள அவர், அவர்கள் என்னிடம் விளக்கம் கேட்கிறார்கள் என விமர்சித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுல காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல! முதல்வரை நார் நாராக கிழித்த நயினார்..!