திருமலை ஏழுமலையானின் திருக்கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம், இந்து சமயத்தின் மிக மாபெரும் திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த விழா, ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமியின் உற்சவ மூர்த்திகளான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை விசேஷ வாகனங்களில் எடுத்துச் சென்று, திருமலையின் நான்கு மாடவீதிகளில் உலாவகட்டும் பிரமாண்டமான நிகழ்வாகும்.
பிரம்மோற்சவம் என்ற சொல்லே பிரம்மா தெய்வத்தையும் உற்சவத்தையும் சேர்த்து உருவானது. புராணங்களின்படி, பிரம்மா தான் இந்த விழாவை முதலில் நடத்தியதாகக் கூறப்படுகிறது. திருமலை புராணத்தின்படி, மனிதர்களைப் பாதுகாக்கும் வெங்கடராமனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று பிரம்மா பூமிக்கு இறங்கி இந்த உற்சவத்தை ஏற்படுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து, உலகம் முழுவதிலிருந்தும் திருமலைக்கு வந்து, சுவாமியின் தரிசனம் செய்கின்றனர். தினமும் காலை 8 முதல் 10 மணி வரைக்கும், இரவு 7 முதல் 9 மணி வரைக்கும் வாகன சேவைகள் நடைபெறும். இவை சுவாமியின் சக்திகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் தான் இந்தியாவுக்கே வரி குறைப்பு... உருட்டி தள்ளிய சி.வி.சண்முகம்...!
இந்த ஆண்டுக்கானா திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஆந்திர மாநில அரசு சார்பில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்குகிறார். கொடியேற்றத்திற்கான கயிறு மற்றும் தர்ப்பை ஊர்வலமாக கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை 5.43 மணி முதல் 6.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 16 வகையான சிறப்பு உணவுகள் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனிடையே, இன்று முதல் வரும் 2 ஆம் தேதி வரை அனைத்து வி.ஐ.பி தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விமானங்களுக்கு ஏன் வெள்ளை பெயிண்ட் பயன்படுத்துறாங்க தெரியுமா? - இதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க...!