திருப்பதியில் இருந்து ஐதராபாத் நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பஸ் மீது மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
திருப்பதியில் இருந்து ஹைதராபாத் நோக்கி வேகமாகச் சென்ற டொயோட்டா குவாலிஸ் கார் ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள ஆலகட்டா மண்டலத்தின் நல்லகட்லா - பட்டலூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில்
கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரைக் கடந்து, எதிர் திசையில் இருந்து வந்த தனியார் பயணப் பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தை அதிர வைத்த விபத்து... காதை கிழித்த மரண ஓலம்...பாதயாத்திரை சென்ற 3 பெண் பக்தைகள் துடிதுடித்து பலி...!
சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஆலகடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் மீது வேகமாக கார் மோதியதில் காரின் முன்புறம் நொறுங்கியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டிஎஸ்பி பிரமோத் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில் இறந்தவர்கள் அனைவரும் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கிரேன் உதவியுடன் காரை சாலையோரம் அகற்றப்பட்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பஸ்சில் இருந்தவர்கள் ஐதராபாத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி தப்பினர். இதனையடுத்து வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: திக்... திக்... சம்பவம்...!! - திடீரென கழன்று ஓடிய கார் டயர் - ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய அமைச்சர்...!