நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யச் சொல்லி நோட்டீஸ் வழங்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சம்பவமாக மாறியது. நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கொடுத்த தீர்ப்பு உள்நோக்கம் கொண்டது எனக்கூறி, திமுக தலைமையிலான இண்டி கூட்டணி எம்பிக்கள் தகுதி நீக்க நோட்டீஸ் கொடுத்தனர்.
நீதித்துறையையும், நீதியையும் திமுக அரசு மிரட்டுவதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. இந்நிலையில் திமுக தலையில் இடியை இறக்கும் விதமாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 56 முன்னாள் நீதிபதிகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல் மற்றும் ஹேமந்த் குப்தா, முன்னாள் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனில் தியோ சிங், முன்னாள் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி, முன்னாள் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.பி. பஜந்திரி மற்றும் முன்னாள் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி ஆகியோர் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அடிதூள்... விடுபட்ட மகளிருக்கு 3ம் கட்டமாக உரிமைத் தொகை வழங்கப்படும்... அமைச்சர் சொன்ன குட்நியூஸ் ...!
அந்த கடிதத்தில் நீதிபதி மீது நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்ட விவகாரம், நீதித்துறை சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், சில அரசியல் அல்லது சித்தாந்த எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகாத நீதிபதிகள் மீது அழுத்தம் கொடுக்க முற்படுவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
முன்னாள் நீதிபதிகள் தங்கள் கடிதத்தில், ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கும் முயற்சியை கடுமையாக விமர்சித்துள்ளனர். "முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான நாங்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய சில எம்.பி.க்கள் மற்றும் பிற மூத்த வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் முயற்சியை கடுமையாக எதிர்க்கிறோம்” எனக்குறிப்பிட்டுள்ளனர்.
சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின் சித்தாந்த மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகாத நீதிபதிகளை வசைபாடுவதற்கான ஒரு வெட்கக்கேடான முயற்சி இது. அத்தகைய முயற்சி தொடர அனுமதிக்கப்பட்டால், அது நமது ஜனநாயகத்தின் வேர்களையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் வெட்டிச் சாய்த்துவிடும்.
கையொப்பமிட்ட எம்.பி.க்கள் குறிப்பிட்ட காரணங்களை மேலோட்டமாக எடுத்துக் கொண்டாலும், பதவி நீக்கம் போன்ற அரிய, விதிவிலக்கான மற்றும் தீவிரமான அரசியலமைப்பு நடவடிக்கையை நாடுவதை நியாயப்படுத்த அவை முற்றிலும் போதுமானதாக இல்லை என குறிப்பிட்ட முன்னாள் நீதிபதிகள், நீதித்துறை முடிவுகளை சவால் செய்ய பதவி நீக்க தீர்மானத்தைப் பயன்படுத்துவது சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது என்று முன்னாள் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!