திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமாக இருந்தவர் குணசேகரன். 2016-ம் ஆண்டு முதல் திருப்பூர் தெற்கு எம்எல்ஏவாக இருந்தவர். இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் கோவையில் உள்ள தனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குணசேகரனின் மறைவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!
இதையும் படிங்க: புரோக்கர் வேலை திமுக IT WING-ன் குலத்தொழில் போல! அதிமுக சரமாரி சாடல்..