சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு மற்றும் போதை பொருட்களை தடுக்க தவறியதாகவும் தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் தவெக தலைமை கழக நிர்வாகிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநில செயலாளர் ஆனந்த், கொள்கைப் பரப்புக் குழு செயலாளர் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நினைத்தபோது திமுக குடும்பம் மிரட்டியதாக தெரிவித்தார்.

அரசியலில் ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்று நினைத்த ரஜினிகாந்த்க்கு மிரட்டல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர்களது ப்ரொடக்ஷனிலேயே படம் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார். ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்த நிலையில் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி இது தொடர்பாக பேசினார்.
இதையும் படிங்க: மகனுக்கு ரூ.100 கோடியில் பிரம்மாண்ட திருமணம்... திமுக அமைச்சருக்கு ஜெயில் உறுதி... அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜு...!
அப்போது, அரசியலில் அதிகாரம் பெறாத நிலையிலும் துணிச்சலான கருத்துக்களை கூறியவர் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார். விஜயின் அரசியல் பயணம் வளர வேண்டும் என்றால் ஆதவ் அர்ஜுனாவை விலக்கி வைப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் சிலர் நாகரீகமற்ற கருத்துக்கள் கூறுவதால் தேவையற்ற மோதல்கள் உருவாகுவதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: புதிய பாதையில் காங்கிரஸ்? ஹைதராபாத்தில் ராகுல் காந்தி - ஆதவ்... வலுக்கும் சந்தேகம்..!!