கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் இந்து மதம் தொடர்ந்து புண்படுத்தப்படுகிறது. ஐயப்பன் பக்தர் கூட்டத்திற்கு முதல்வர் கேரளா செல்கிறார் என்றால் வாக்கு வங்கிகளுக்கு செல்கிறார் என எடுத்துக் கொள்ள முடியுமா??. வன்னியரசு பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.
ராமன் குறித்து அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார். சமூகநீதியை காப்பாற்றியவர் ராமன். ஆனவ கொலைகளை தடுக்க துப்பு இல்லை. ஆனால் ராமன் பற்றி பேசி வருகிறீர்கள். உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆணவ கொலை நடந்தால் சிறப்பு விசாரணை நடைபெறும். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை.
இந்தியா கூட்டணிக்கு ஒரு வாக்கு கூட விழ கூடாது. இதை மக்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன். ஆணவ கொலைக்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். பழங்குடி பெண் பழம் வாங்கி சாப்பிட்டு உள்ளார். ராமன் சமூக நீதி காப்பாற்றி கொடுத்தவர். செய்தியாளருக்கு, வன்னிய அரசுக்கு கம்பர் எழுதிய ராமாயணம் புத்தகம் கொடுக்கப்படும்.
இதையும் படிங்க: "SAFETY FIRST".. தூய்மை பணியாளர்களுக்கு பூட்ஸ் குடுங்க! தமிழக அரசுக்கு தமிழிசை வலியுறுத்தல்..!
பஞ்சாப் மாநில முதல்வரை ஏன் ? அழைக்கிறார்கள். பீகாரில் என ராகுல் காந்தி நடைப்பயணத்தில் கலந்து கொள்ள போகிறீர்கள், தமிழ் நிலை நிறுத்தும் கட்சி பா.ஜ.க தான். சி பி இரதாகிருஷ்ணன் மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஏற்கொள்ளவில்லை. சுயநில அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். சமூகநீதி காவலர் என்று ஸ்டாலின் சொல்லிக் கொள்ள முடியாது.
ரெட்டி சமூகத்தை எதிர்த்து நான் பேசவில்லை. அப்படி தவறாக போட வேண்டாம். சாதியை பற்றி நான் பேசவில்லை. தமிழர்களை கொன்று குவித்தவர்கள் தி.மு.க வும் , காங்கிரஸ் தான்.மாநில சுய ஆட்சி வேண்டும் என்பவர்கள் நீங்கள் பீகார், பஞ்சாப் போக காரணம் என்ன ??
ஹிந்தி தெரியாது என்று பனியன் போட்டவர்கள் ! பீகார் செல்லும் போது போட்டுக் கொள்வீர்களா ?? . நம்ம மாநிலத்தில் நிற்பவர்களை ஏன் ஆதரிக்க தவிர்க்க மறுக்கிறீர்கள். அரசியல் செய்ய வேண்டும் என்பதால் சுதர்சன் ரெட்டி போட்டியிட வைத்து உள்ளனர் . இந்தியா கூட்டணி தமிழர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை??
தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிகள் இருந்தால் பா.ஜ.க வெற்றி பெறும்.
இப்ப விஜய் பற்றி நான் பேச மாட்டேன் இதை விட பெரிய பிரச்சனை உள்ளது. தமிழக வெற்றி கழகம் டாப்பிக் நிறைய பேசிவிட்டேன், 2026 தேர்தலை மையப்படுத்தி சி.பி.இராதாகிருஷ்ணன் நிறுத்தவில்லை..
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் போராட்டம்: நேரில் சென்ற தமிழிசை.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!!