சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் ஆறு லட்சத்து 77 ஆயிரத்து 400 மதிப்பில் திறந்த வழி உடற்பயிற்சி கூடத்தை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கார்த்தி சிதம்பரம், தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை த்தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே உள்ள திட்டம்தான் அதனை விரிவு படுத்தி தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். தற்போது விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விமர்சனம் அண்ணாமலை பீகாருக்கு செல்லவில்லை போல. பீகாருக்கு போயிருந்தால் தெரிந்திருக்கும் அங்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கும்பொழுது அண்ணாமலை இந்த கருத்தை தெரிவித்திருக்கலாம். இது தொடர்ச்சியாக உள்ள திட்டம் தான் புது திட்டம் கிடையாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமல்படுத்தப்பட்ட திட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
பூரண மதுவிலக்கு என்பது உலகம் முழுக்க ஒரு தோல்வி அடைந்த திட்டம். இது எங்கேயும் வெற்றியடைந்த திட்டம் கிடையாது. மதுவை கட்டுப்படுத்தலாமே தவிர முழுமையாக தடை செய்ய முடியாது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு இருக்கிறது என்று பேப்பரில் தான் பெயர் இருக்கிறது. ஆனால் காந்தி பிறந்த ஊரான போர்பந்தரில் தான் மது இறக்குமதியே ஆகிறது.
இதையும் படிங்க: அடுத்த அயோத்தியாகும் திருப்பரங்குன்றம்?... திமுகவை சல்லி சல்லியாய் நொறுக்க பாஜக பக்கா ஸ்கெட்ச்... அதிரும் அறிவாலயம்...!
அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முன்பு பெரிதாக வெற்றியடையும் என்று நம்பிக்கையை கட்சி தொண்டர்களுக்கு ஊக்குவிப்பது வாடிக்கையான விஷயம். அதுவே நடைமுறையாகும் என்பது அர்த்தம் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் இலக்கணமும் வெவ்வேறு. பீகாரில் இருக்கும் இலக்கணம் தமிழ்நாட்டில் வேலை செய்யாது. தமிழ்நாட்டிற்கு வேறு இலக்கணம். அதே போல் பெங்காலில் உள்ளது வேறு இலக்கணம். அந்தந்த ஊர் இலக்கணம் படி அந்தந்த ஊர் கூட்டணிப்படி அந்தந்த ஊர் அரசியல் நிலவரப்படி தேர்தல் முடிவுகள் வரும்.
தமிழ்நாட்டிற்கு நன்றாக அமித்ஷா மோடி உள்ளிட்டவர்கள் வரட்டும். தேர்தல் வரும்போது அடிக்கடி அவர்கள் வரத்தான் செய்வார்கள். தமிழ் உணவு தான் பிடிக்கும் என்பார்கள். தமிழ் மொழி தான் பிடித்த மொழி எங்களுக்கு என்பார்கள். தேர்தல் வரும் பொழுது ஒரு சீசனுக்கு வந்துவிட்டு போறவர்கள் தான் அவர்கள். தேர்தல் இல்லாத போது தமிழ்நாட்டைப் பற்றி எந்த கவனமும் அவர்களுக்கு இருக்காது. புலம்பெயரும் பறவைகளைப் போல தேர்தல் சீசனுக்கு தமிழ்நாட்டிற்கு வந்து செல்பவர்கள் தான் அவர்கள்.
தமிழ்நாட்டுடைய எந்த ஒரு உரிமையையும் திமுகவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் விட்டுக் கொடுக்காது. கர்நாடகாவில் இருக்கிற அரசியல் கட்சியினர் அவர்களுடைய நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வார்கள் நம்முடைய நிலைமையை நாம் எடுத்துச் சொல்வோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் சரியாக தீர்ப்பு வரவில்லை என்றால் உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம்.
வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டியா நாலரை உன்னை போட்டியா என்பது தெரியவில்லை. இனிமேதான் அது செட் ஆகும். மார்ச் மாதம் தான் இதில் தெளிவு வரும். ஒவ்வொரு கட்சியிலும் இருப்பவர்கள் அவர்களின் கட்சியை உயர்த்தி பேசுவது வாடிக்கை. தேர்தல் என்பது அந்த ஊர் இலக்கணம் அந்த ஊர் கூட்டணியை பொருத்தம்தான் முடிவாகும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!