புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஊசிமணி பாசிவிற்கும் ரெங்கம்மாள் சத்திரத்தைச் சேர்ந்த நரிக்குறவன இன மக்கள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு ஊசிமணி பாசிகளை அணிவித்து வீடு கட்டுவதற்கு அரசு கொடுக்கும் நிதி பற்றவில்லை அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, முன்கூட்டியே விருப்பமனுவை அதிமுக வாங்கி அவர்கள் கட்சியில் நிற்பதற்கு ஆள் இருக்கிறார்களா என்று பார்க்கிறது, கட்சியை விட்டு யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் முன்கூட்டியே விருப்பமனு வாங்குகிறார்கள். இதுதான் அவர்கள் விருப்பமனு வாங்குவதற்கு அடிப்படை காரணம்.
இதையும் படிங்க: “மோடியும், அமித் ஷாவும் தேர்தல் சீசனுக்கு தமிழக வரும் பறவைகள்” - பாஜகவை பங்கமாய் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்...!
யாராக இருந்தாலும் நாங்கள் அன்பாகத்தான் நடந்து கொள்வோம். யாரிடமும் எதிர்ப்பு வெறுப்பு காமிக்கிற கட்சி நாங்கள் கிடையாது. எல்லோரையும் தோழமையோடு அரவணைக்கின்றவர்கள் தான் நாங்கள். கொள்கை மாறுபாடு தானே தவிர வேறு எந்த விதத்திலும் யாரையுமே நாங்கள் தொந்தரவு செய்பவர்கள் அல்ல. திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொண்டால் யாருடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம்.
உதயநிதி ஸ்டாலின் இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையில் அனைவரும் இருக்கிறார்கள். உதய நிதியை தலைமையாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் கிடையாது. தலைவர் அடுத்து இளம் தலைவர் உதயநிதி.
ஏற்கனவே சேலத்தில் 15 லட்சம் இளைஞர்களை ஒன்று திரட்டி இளைஞரணி மாநாட்டை நடத்தினோம். இளைஞர்கள் திமுகவில் தான் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சேலத்தில் நடத்தப்பட்ட மாநாடு என்பதை யாரும் மறந்து விட முடியாது. மண்டலம் வாரியாக ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இளைஞரணி மாநாடுகள் நடத்தப்பட்டது. அதன் படி திருவண்ணாமலை யில் ஒன்றரை லட்சம் இளைஞர்கள் மட்டுமே கலந்து கொண்ட மாநாடு.
அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமை படையெடுத்து தான் வர வேண்டும். தங்கள் கட்சியுடைய டெபாசிட்டையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அமித்ஷா மோடியும் தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரத்தான் வேண்டும். ஆனால் எந்த பணமும் அவர்கள் கொண்டு வர மாட்டார்கள். நம்ம பணம் நமக்கு நம்ம பணத்தையும் அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள் மற்ற மாநிலத்திற்கு அவர்கள் செலவு செய்கிறார்கள். நம்ம பணத்தை மற்ற மாநிலங்களுக்கு செலவு செய்கின்றவர்கள் தான் அவர்கள் தவிர இப்ப எந்த பணத்தையும் தருவதில்லை.
பீகார் வேறு தமிழ்நாடு வேறு. தமிழ்நாட்டில் வேறு எந்த இயக்கமும் காலூன்ற முடியாது. இது திராவிட இயக்கத்துடைய வரலாற்று சிறப்புமிக்க பூமி. ஆரம்ப காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தை ஊட்டி ஊட்டி வளர்த்த பூமி. இங்க இருக்கக்கூடிய தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. ஆன்மீக அரசியலை சொல்லி எல்லாம் ஏமாற்ற முடியாது. நாங்கள் ஆன்மீக அரசியலுக்கு எதிரிகள் அல்ல. தமிழ் உணர்வு உள்ள அத்தனை வாக்காளர் மக்களுக்கும் நன்றாக தெரியும். எங்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்று எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் எங்களுடைய கொள்கை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை. எல்லோரும் சமம் என்பது தான் எங்களுடைய கொள்கை. எல்லோரும் சமம் என்று ஏற்றுக் கொண்டு அவர்கள் வந்தார்கள் என்றால் எங்களுக்கு எந்த ஆட்சியபனையும் கிடையாது. எல்லோரையும் சமமாக அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். எதிரி உதிரி எல்லாம் அவர்கள் தான்.
இளைஞர்கள் முதியவர்கள் என கட்சியில் உள்ள அனைவருக்கும் சம உரிமை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இளைஞர்களும் வரவேண்டும் அல்லவா. கட்சியை பலப்படுத்த இளைஞர்கள் தேவைதான். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது இளைஞர் அணி செயலாளருக்கு உரிமை உண்டு. அவரது உரிமையை அவர் கேட்கிறார்.
எஸ் ஐ ஆர் பணி முடிவடைந்துள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளிவந்த பிறகு தான் என்னென்ன நடந்திருக்கிறது என்பது தெரியவரும். விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. திமுக களப்பணியில் முதல் இடத்தில் இருக்கும். ஒரு வாக்காளர்கள் விடாமல் அதிமுகவை பாஜகவா திமுகவா என எதை பற்றியும் கவலைப்படாமல் அனைவரையும் வாக்காளர்களாக சேர்க்கின்ற கட்சி தான் திமுக. எங்க கட்சியின் மட்டும் நாங்கள் சேர்க்க மாட்டோம் அனைத்து கட்சியினரையும் சேர்ப்போம்.
காவிரி வைகை கொண்டார் இணைப்பு திட்டத்திற்கு முதன் முதலில் மாயனூரில் அணைக்கட்டியது திமுக அரசு தான். அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்த திட்டத்தை முறையாக செய்யாமல் அறிவிப்பை செய்துவிட்டு சென்றுவிட்டனர். தற்போது நிலத்தை கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பேசி தான் நிலத்தை கையகப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. காவிரி வைகை குண்டார் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் சி விஜயபாஸ்கர் உண்ணாவிரதம் உள்ளிட்ட எது வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அவர் பொதுமக்களிடம் பேசி நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கட்டும்.
திமுக அரசு வந்த பிறகுதான் மக்கள் நல்வாழ்வு துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட வருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் சி விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அந்த துறைக்கு பெயிண்ட் மட்டுமே அவர் அடித்தார் வேறு எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த அயோத்தியாகும் திருப்பரங்குன்றம்?... திமுகவை சல்லி சல்லியாய் நொறுக்க பாஜக பக்கா ஸ்கெட்ச்... அதிரும் அறிவாலயம்...!