நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் கூறிய நிலையில் தற்போது நிதி ஆயு கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளதை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் நிதியைய கூட்டத்தில் பங்கிற்கு டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் எல்லாம் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில், இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டடிருக்கிறார். அந்த பதிவில் மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீர வசனமாக பேசிய முதலமைச்சர், தற்பொழுது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி டெல்லிக்கு பறக்கிறாராம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் டெல்லிக்கு போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்று 2ஜிக்காக அப்பா டெல்லி சென்றார் என்றும் இன்று டாஸ்மார்க் தியாகிக்காக மகன் டெல்லி செல்கிறார் என்ற ஒரு தோணியில விமர்சித்திருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் மின்கட்டண உயர்வு? அமைச்சர் சிவசங்கர் கொடுத்த பரபரப்பு அறிக்கை..!
மேலும் வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டதோ என்று மறைமுகமாக சாடியுள்ள அவர் படுத்தே விட்டார் ஐயா என்றெல்லாம் கூட அந்த பதிவில் வந்து தெரிவித்திருக்கிறார். கடந்த காலங்கள்ல நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர், தற்பொழுது டெல்லிக்கு செல்ல இருப்பதாக வெளியாகியுள்ள தகவலை விமர்சித்துள்ளார். இறுதியாக எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு! எனக்குறிப்பிட்டுள்ள இபிஎஸ், #யார்_அந்த_தம்பி என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்களை காப்பது அரசின் கடமை... அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட கண்டிஷன்ஸ்!