மும்பை: மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி, மாநில அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 28 ஆண்டுகளாக தாக்கரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சியை பாஜக கைப்பற்றியதுடன், மராத்திய மொழி உணர்வு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
“மும்பை மராத்திய மண்; மராத்தியர்களுக்கே சொந்தம் என்ற மொழி ரீதியான பிளவுகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுரை எழுதிவிட்டது” என்று பாஜக தலைவர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார். “இனி மொழி பிரிவினை பேசுபவர்கள் அல்ல; ஹிந்துக்களின் நலனை முன்வைத்து வளர்ச்சி பேசுபவர்களே மஹாராஷ்டிராவை ஆள முடியும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாக்பூர் (முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சொந்த ஊர்) உள்ளிட்ட பல நகரங்களிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. நாக்பூரில் 151 வார்டுகளில் கடந்த 2017-ல் 108 இடங்களை வென்ற பாஜக, இப்போது அதைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பாஜக வெற்றிக்கு EV மெசினும்! எலெக்ஷன் கமிஷனுமே காரணம்!! காங்கிரஸ் மீண்டும் குற்றச்சாட்டு

மொழி உணர்வை முன்வைத்து தீவிர பிரசாரம் செய்த உத்தவ் தாக்கரே – ராஜ் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி தோல்வியடைந்துள்ளது. கடந்த மாதம் ஒன்றிணைந்து மராத்திய மொழி உணர்வை தூண்டியும், இளம் வாக்காளர்களிடம் அவர்களது ‘தாக்கரே பிராண்ட்’ எடுபடவில்லை. மாறாக, பாஜகவின் ஹிந்துத்வா, வளர்ச்சி திட்டங்கள், பெண்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள், இளைஞர்களை ஈர்க்கும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மக்களை கவர்ந்துள்ளன.
வெற்றிக்கு முக்கிய காரணங்கள்:
- ஹிந்துத்வா & வளர்ச்சி அரசியல் இளம் வாக்காளர்களை ஈர்த்தது
- மொழி உணர்வை விட நல்லாட்சி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்புக்கு மக்கள் முன்னுரிமை அளித்தனர்
- தாக்கரே பிராண்ட் முற்றிலும் பலவீனமடைந்தது
- வாரிசு அரசியலை மக்கள் புறக்கணித்ததால் பவார் குடும்ப ஆதிக்கம் மங்கியது
- வட இந்தியர்கள், மராட்டியம் பேசாதவர்களின் ஓட்டுகளை பாஜக பெருமளவு பெற்றது
- பெண்கள் நலத் திட்டங்கள் மீண்டும் வெற்றிக்கு வித்திட்டன
- எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாதது பாஜகவுக்கு பெரும் பலம்
மொழி அடையாள அரசியலில் இருந்து நகர்ப்புற வளர்ச்சி அரசியலுக்கு மஹாராஷ்டிரா மாறியுள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணிக்கு வெற்றி! காங்கிரஸ் கூட்டணிக்கு அடிமேல் அடி! மாபெறும் சறுக்கல்!