சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பாலாஜி நகரி லுள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் 55-வது ஆண்டு தொடக்க விழாவில் கட்சி நிர்வாகிகளோடு பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் ளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள எஸ்.பி.வேலுமணி கட்சியில் இணைப்பவர்கள் குறித்து நேரடியாக எடப்பாடி பழனிச்சாமியிடம் சொல்லலாம். கட்சிக்கு யார் வந்தாலும் இணைத்துகொள்ளும் பக்குவத்தை கொண்டவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.
இவர் வரவேண்டும், அவர் வரவேண்டும் என யாரையும் பிரித்துப் பார்ப்பது கிடையாது. இவர் இயக்கத்திற்கு வந்தால் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் என்று தெரிந்தால் அவர்களை இணைத்துக்கொள்ளும் பணியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். நல்ல கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படும். யார் இணைந்தாலும் நல்லவர்களை ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.
இதையும் படிங்க: திரைத்துறையில் தவெக - திமுக மோதல் உச்சம்?! கமல், தனுஷ், வடிவேலு படங்களில் நடிக்க தடை! பேச்சுவார்த்தை தோல்வி!
இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் நடிகர் தனுஷ். முன்னணி கதாநாயகனாக உள்ள தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம்.
நடிகர்கள் அரசியலுக்கு வரலாம், அரசியலுக்கிய வந்தபின் நடிக்கக் கூடாது. இன்றுள்ளவர்கள் படத்திலும் நடிக்கிறார்கள், அரசியலிலும் நடிக்கிறார்கள். நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைய விரும்புவதாக கூறப்படும் தகவல் உண்மையா? அல்லது வதந்தியா! என்பதை காலம் தான் பதில் சொல்லும். என்றார்.
இதையும் படிங்க: விஜய்யை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயனை அரசியலுக்கு வரவேற்கும் பாஜ!! திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சி!