முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, கடந்த மாதம் நடத்திய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போது, இந்த அமைப்பின் பெயர் கழகமாக மாற்றப்படுவதாகவும், டிசம்பர் 15-ம் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டி வரும் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
இதனால், ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் ஒருங்கிணைப்பு குறித்து விவாதித்தார்.
அப்போது, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்த பிறகு முடிவு தெரிவிப்பதாக அமித் ஷா கூறியதால், ஓ.பன்னீர்செல்வம் அதற்காக காத்திருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்த OPS! பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? தனிக் கட்சியா?
இந்நிலையில், இன்று (டிசம்பர் 15) நடைபெறவிருந்த மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்' என மாற்றப்பட்டுள்ளது.

கூட்டம் ஒத்திவைப்பு குறித்த அறிக்கையில் இந்த புதிய பெயர் இடம்பெற்றுள்ளது. அறிக்கையில், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை வேப்பேரியில் டிசம்பர் 23-ம் தேதி மாலை நடைபெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெக கூட்டணியில் அமமுக?! தமிழகத்தில் 4முனை போட்டி தான்!! டிடிவி ஓபன் டாக்!