சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா, அவரது மனைவி கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஆகியோர் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, 750 ஆண்டுகள் பழமையான 'சர்வமூல கிரந்தத்தின் அரிய கையெழுத்துப் பிரதியை நினைவுப்பரிசாக வழங்கி மகிழ்ந்தனர்.

மார்ச் 6 -ம் தேதி பெங்களூருவில் நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு, இந்த புதுத் தம்பதி டெல்லி சென்று பிரதமர் மோடியின் ஆசிகளைப் பெற்றனர். 13 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி மத்வாச்சார்யா எழுதிய கையெழுத்துப் பிரதி 'சர்வமூல கிரந்தம்'. மோடிக்கு வழங்கப்பட்ட இந்த நூலை பாதுகாக்க வேஃபர்ஃபிச் தொழில்நுட்பத்தைப் பயன்படுதப்பட்டுள்ளது. இதனால் இந்த நூல் 1,000 ஆண்டுகள் வரை நீடித்து பாதுகாப்பாக இருக்கும். இதனை உறுதி செய்வதற்காக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் சந்திர மண்டலங்களுக்கு அனுப்பப்டும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட சிலிக்கான் வேஃபர் முறை இந்த புத்தகத்தை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு முயற்சியை தேஜஸ்வி சூர்யாவின் பெங்களூரு தெற்கு தொகுதியைச் சேர்ந்த தாரா பிரகாஷனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்னெடுத்தது. இது பண்டைய ஞானத்தை, நவீன கண்டுபிடிப்புகளின் மூலம் பாதுகாப்பதை காட்டுகிறது. இந்த புத்தகத்தால், பெரிதும் வியப்படைந்தார் பிதமர் மோடி. அவர்களது திருமணத்தின் புகைப்படங்களை ஏற்கனவே பார்த்ததாகவும் மோடி கூறினார்.
இதையும் படிங்க: தெருநாய்கள் தொல்லை தாங்க முடியல... பிரதமர் மோடியிடம் புலம்பிய கார்த்தி சிதம்பரம்!!

பாஜகவின் இளம் எம்.பி.யும், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவருமான தேஜஸ்வி சூர்யா, சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் தம்பதி மோடியின் ஆசிகளைப் பெற்ற பெருமையைப் பற்றி தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் கன்னடத்தில் எழுதி இந்த தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர். சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் கர்நாடக பக்தி இசையின் பிரபலமான ரசிகர் பிரதமர் மோடி. சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் 2024 ராம பஜனையை பிரதமர் மோடி முன் பாடி அசத்தினார். இதற்காக சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டி இருந்தார். அதனை இப்போது நினைவு படுத்தி வாழ்த்தி, ஆசிர்வதித்த பிதமர் மோடி இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் சர்வமூல கிரந்த் கையெழுத்துப் பிரதியை ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: நிலநடுக்கம் பாதிப்பு..! மியான்மர், தாய்லாந்துக்கு உதவிக்கரம் நீட்டிய பிரதமர்..!