சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், அவர் பேசியதாவது : காவல்துறை என் நடைபயணத்தை தடை செய்ததால், நடைபயணம் 108 நாட்களாக உயர்ந்துள்ளது. என்னிடம் அதிகாரம் இல்லாததால், தமிழகத்தில் நீர் பாசன திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. தமிழக்தில் இன்னும் 4 மாதங்களில் நம்முடைய ஆட்சி தான். திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும் என ஒருவர் கூட விரும்பவில்லை. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாகம் பற்றி தெரியவில்லை. திமுகவினர் கொள்ளையடித்து கொண்டு இருக்கின்றனர். எனக்கு ஒரு வாய்ப்புகள் கொடுங்கள். பெங்களூர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், மேட்டூர் அணையில் நீர் பச்சையாக காட்சியளிக்கிறது.
சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு. சமூக நீதிக்கும், ஸ்டாலினுக்கும் சம்மந்தம் இல்லை. தமிழ்நாடு முன்னேற வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நான் முதல்வராக இருந்தால், மக்கள் எப்படி இருக்கீர்றார்கள், அவர்களின் நிலைமை, தொழில், வேலை என 70 கணக்கெடுப்பு எடுத்துவிடுவேன். இதன் மூலம் அவர்களுக்கான இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு என அனைத்தும் வழங்கப்படும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை என்றால், கலைஞர் கணக்கெடுப்பு என பெயர் வைத்து நடத்துங்கள். பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு 18 சதவீதமாக இருப்பது, 22 சதவீதமாக உயரும். இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு அளிக்க மறுக்கிறார். அவருக்கு, தேர்தலில் சீட் தான் முக்கியம். காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஆதரவு தர மாட்டாரா? ராகுல் காந்தி சாதிவாரி கண்க்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருகிறார். சாதியை யாராலும் அளிக்க முடியதாது. சமீபத்தில், கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் திறக்கப்பட்டது. சாதியால் ஏற்பட கூடிய வேற்றுமை, கெடுதலை அளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: கறார் காட்டுனேன்... அதான் அன்புமணிக்கு இப்படி ஒரு பேச்சு...! சபாநாயகர் அப்பாவு பதிலடி...!
தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருக்கின்றனர். அமெரிக்காவில் கிடைக்க கூடிய போதை பொருட்கள், அனைத்து கிராமங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் அதிக போதை பொருள் கிடைக்க கூடிய மாநிலம் தமிழகம். நான்கரை ஆண்டுகளில் போதை பொருளை ஒழிக்காத இந்த ஆட்சி, மீண்டும் வந்தால் ரேஷன் கடைகளில் விற்பார்கள். தேர்தலுக்கு முன்பு, ரூ 1,000 கொடுத்தால், மனம் மாறி விடுகிறது. பின்னர், வருந்தி பயன் இல்லை.
இதனை தமிழகம் 1967-ல் இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு வழங்கி, 1,310 நாட்கள் ஆகிறது. நேர்மையான முதல்வராக இருந்தால், கொடுத்து இருப்பார். இதனை கொடுக்காத திமுகவிற்கு வன்னியர்கள் வாக்களிக்க கூடாது. வன்னியர்களுக்கு எதிரான துரோகி திமுக. இதனால் தான் டிசம்பர் 17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளேன். 505 வாக்குறுதியில் 66 தான் நிறைவேற்றம். தேர்வில் பாஸ் மார்க் 35, திமுக 13 மார்க் எடுத்து பெயில் ஆகிவிட்டது. அமைச்சர் முத்துசாமி 90 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக தெரிவித்து, வாதிட தயாரா? என கேட்டார். நான் வாதிட தயார், எந்த இடம் என தெரிவியுங்கள், நான் வருகிறேன். தீபாவளிக்கு டாஸ்மாக் படம் ரூ 789 கோடி வசதல் செய்தது தான் திமுக சாதனை. திமுகவை வீட்டிற்கு அனுப்புங்கள், யார் வர வேண்டும் என்பதை விட, யார் வர கூடாது என்பதை தெரிந்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: நான் எதிர்பார்க்கவே இல்ல.. ஐயா கொடுத்துட்டாரு…! செயல் தலைவர் பதவி வழங்கியது குறித்து ஸ்ரீகாந்தி கருத்து…!