தவெக உடைய செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் 28 பேர் கொண்ட இக்குழுவை அறிவித்திருக்கிறார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கட்சியில் எந்தவித செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அறவே இல்லாமல் முடங்கி இருந்த சூழலில் நேற்றைய தின சந்திப்புக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் இன்றைய தினம் அதிகப்படியான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த அளவில் கட்சியுடைய சிறப்பு பொதுக்குழு அடுத்த வாரம் கூட இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உடனடியாக கட்சியுடைய அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு கட்சியுடைய தலைவர் விஜய் தலைமையில் 28 பேர் கொண்ட குழு ஒன்றை புதிதாக உருவாக்கி அந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார் கட்சி தலைவர் விஜய்.
இந்த குழு விஜய் தலைமையில செயல்படும் என்றும், தமிழக வெற்றி கழகத்தின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க இந்த குழுவில் முதல் நபராக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். முக்கிய நிர்வாகிகளான இவர்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்களின் செயலாளர்களும், உறுப்பினர்களாக உள்ள இருவரும் நிர்வாகக்குழு பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்.! பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கிய விஜய்...!
அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வீதத்தில் 114 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைமை மாவட்ட செயலாளர், அதாவது இப்ப பெரம்பலூர் எடுத்துக்கொண்டால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாவட்ட செயலாளர் என்ற வீதத்தில் இந்த புதிய குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய குழு கட்சியுடைய அடுத்த கட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில இந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழுவில இருக்கக்கூடிய நிர்வாகிகளை கட்சியுடைய தலைவர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய நிர்வாக குழுவுக்கு பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜயை அரெஸ்ட் பண்ணாததுக்கு காரணமே இதுதான்! ஆதவ் எப்படி தப்பிச்சாரு? சீமான் பரபரப்பு பேட்டி...!