தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கட்சியில் எந்தவித செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அறவே இல்லாமல் முடங்கி இருந்த சூழலில் நேற்றைய தின சந்திப்புக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் இன்றைய தினம் அதிகப்படியான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த அளவில் கட்சியுடைய சிறப்பு பொதுக்குழு அடுத்த வாரம் கூட இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உடனடியாக கட்சியுடைய அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு கட்சியுடைய தலைவர் விஜய் தலைமையில் 28 பேர் கொண்ட குழு ஒன்றை புதிதாக உருவாக்கி அந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார் கட்சி தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக்கழகத்தின் அன்றாட பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக்குழுவை இன்று நியமனம் செய்தார் அக்கட்சி தலைவர் விஜய். தவெகவின் அன்றாடப் பணிகள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த குழுவானது அமைக்கப்பட்டது.
ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன், விஜயலட்சுமி உள்ளிட்ட 28 பேர் அடங்கிய நிர்வாக குழுவை அமைக்கப்பட்டுள்ளது. தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கும் நிர்வாக குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த அதிரடி... 28 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட விஜய்... தவெகவில் புதிய குழு நியமனம்...!
இக்குழுவானது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளரான என்.ஆனந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்.! பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கிய விஜய்...!