தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கியது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் தான் தற்போது அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் பாஜக, அதிமுக கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகளை இந்த கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படியிருக்கையில், எடப்பாடி பழனிசாமியின் தலையீடு காரணமாக, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழு என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த நிலையில், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் விலகியிருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
அமுமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் காட்டுமன்னார்கோவில் செய்தியாளிடம் கூறியதாவது: துரோகத்தின் உச்சகட்டத்தில் எடப்பாடி உள்ளார் எங்கு சென்றாலும் வெற்று பேச்சுகளும் பேசிக்கொண்டு அன்னை முதலமைச்சர் என மார்தட்டி கொள்கிறார். டெல்லியில் இருந்து அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்த போது ஒன்றிணைப்பதாக முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அவருடைய முயற்சிகள் எடுபடவில்லை. எங்களுக்கு அமித்ஷாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளோம் ஆனால் டிசம்பர் 6 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமமுகவும் அம்பேலா?... பாஜக கூட்டணிக்கு சைலண்ட்டாக ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி...!
இதையும் படிங்க: விஜயகாந்தை போல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்… நம்ம தயாராகனும்! டிடிவி தினகரன் பேச்சு..!