காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழக முழுவதும் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை பற்றி எந்த விவரங்களும் தெரியவில்லை.

சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் பற்றி அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். யாரை கைது செய்து யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. முதலமைச்சரைப் பற்றி பதிவு போட்டால் உடனடி கைது நடவடிக்கை இருக்கிறது ஆனால் தேசத்திற்கு விரோதமான செயல்கள் செய்பவர்கள் மீது தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கோவையில் சிலிண்டர் வெடிகுண்டு சம்பவத்திற்கு பின் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பாகிஸ்தானியர்கள் தமிழ்நாட்டில் இருப்பது குறித்து கணக்கெடுப்பதில் திருப்தியில்லை.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளார்கள். கோவையில் துடியலூர், தொண்டாமுத்தூர் ஆகிய இடங்களில் சட்டவிரோத வெளிநாட்டவர் தங்கி இருப்பதாக தகவல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை. திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் வெளியூர் தொழிலாளிகள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல் கிடைக்கிறது என்று பதிவு செய்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி தான் அளித்துள்ளார்.

வாக்குறுதியை நாங்கள் கேட்கவில்லை செயல்களை எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு தனி நாடு வேண்டும் என கேட்டுச் சென்றது பாகிஸ்தான் தங்களது அரசாங்க மதமாக இஸ்லாமியத்தை வைத்துகொண்டது. அங்கே இந்துக்கள் எண்ணிகை குறைந்துள்ளது. அதேபோல் பங்களாதேசிலும் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்? இதை பாஜக சொன்னால் மதவாதமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் தான் இப்படி பண்றாங்க.. தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு!!